கம்பராமாயணம் 8293 · யுத்த 18.246
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
அகல் ஆசை எங்கும் - அகலமாகப் பரந்துள்ள திசைகளில் எல்லாம்; அழியா வில்லைச் செலுத்தி - அழியாத ஒளியைப் பரப்பி; அல்லைச் சுருட்டி - (அதனால் அங்கு உள்ள) இருளைச் சுருங்கச் செய்து; வெயிலைப் பரப்பி - (சூரியனது) ஒளியைப் பரவும் படியாகச் செய்து (தன் திருமேனியின் செந்நிற ஒளி விளங்கவும்); விரிகின்ற சோதி - (தன் கருத்து வெண்மையில் இருந்து) விரிந்து வெளிப்படுகிற ஒளி; நிலவைத் திரட்டி - நிலவு ஒளியை ஒன்றாக்கி; எல்லைக் குயிற்றி - பகலைத் தோற்றுவித்து; மிளிர - விளங்கவும்; எரிகின்ற மோலி - (தலையில்) ஒளி வெளிப்படுத்துகிற முடி; இடை நின்ற மேரு எனும் - பூமிக்கு இடையில் உள்ள மேருமலை என்று கூறப்படுகிற, அத்தொல்லைப் பொருப்பின் - அந்தப் பழமையான மலையின்; மிசையே விளங்கு சுடரோனின் - மேலே விளங்குகிற கதிரவனின் ஒளியைக் காட்டிலும்; மும்மை சுடர - மும்மடங்கு மிகுந்து ஒளி வீச.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Rolling up the dark, spreading sunlight, sending an undying
- radiance over all the wide quarters, gathering moonlight, his spreading brilliance shining,
- weaving the day, his blazing crown shone three times brighter
- than the sun that shines on top of that ancient mountain called Mēru, which stands at the centre.
What the poem says
More of Garuḍa's splendour. He rolls the darkness back, spreads light like sunshine and moonlight together, and makes it day.
The crown on his head blazes three times brighter than the sun on top of Mount Mēru, the mountain at the centre of the world.