கம்பராமாயணம் 8294 · யுத்த 18.247

Section யுத்த காண்டம் / 18. நாகபாசப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

நன்பால் விளங்கு - (தன்) அழகிய (கழுத்தின்) இடத்தில் விளங்குகின்ற; கோடி மணியோடு - கோடிக்கணக்கான மணி பதித்த மாலைகளோடு; நளிர் போது - குளிர்ச்சி பொருந்திய பூ மாலைகளும்; செம்பொன் முதலாத் - சிவந்த பொன்னாலான மாலைகளும் முதலானவையாக; தன்பால் இயைந்த - தன்னிடத்தில் பொருந்திய; நிழல் கொண்டு அமைந்த - ஒளி கொண்டு பொருந்திய அணிகலன்கள் எல்லாம்; தழுவாது வந்து தழுவ - (சிறகடித்து விரைவாகப் பறந்து வருவதால் மார்பில்) படாதும் பட்டும் பொருந்தி இருக்கவும்; மின்பால் இயன்றது ஒரு குன்றம் - மின்னலால் உண்டாக்கப்பட்ட ஒரு மலை; வானின் மிளிர்கின்றது என்ன - வானத்தில் தோன்றி விளங்குகின்றது என்று சொல்லும்படியாக; வெயிலோன் - கதிரவன்; தென்பால் எழுந்து - தெற்குத் திசையில் உதித்து; வடபால் நிமிர்ந்து - வடக்கே நிமிர்ந்து உயர்ந்து; வருகின்ற செய்கை தெரிய - வருகின்ற தன்மை விளங்கவும் (தொடர்ச்சி அடுத்த பாடலில்)

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. With a crore of gems shining on his fair neck, cool flowers, red gold and the rest,
  2. the ornaments that held a radiance of their own touching him and not touching as they came,
  3. as if a mountain made of lightning were flashing in the sky,
  4. so it was clear to see, like the sun rising in the south and climbing toward the north.

What the poem says

Garuḍa's jewels, strings of gems, flower garlands and gold chains, swing on his chest, now touching it and now flying clear, as he flies at speed.

He looks like a mountain made of lightning flashing across the sky, or a sun rising in the south and climbing northward, as he flies from the south toward Irāmaṉ.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1naṉ pāl viḷaṅku maṇi kōṭiyōṭu, naḷir pōtu, cem poṉ mutalāt
taṉpāl iyainta niḻal koṇṭu amainta taḻuvātu vantu taḻuva,
miṉpāl iyaṉṟatu oru kuṉṟam vāṉiṉ miḷirkiṉṟatu eṉṉa, veyilōṉ
teṉpāl eḻuntu, vaṭapāl nimirntu varukiṉṟa ceykai teriya.