கம்பராமாயணம் 8295 · யுத்த 18.248
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
பல்நாகர் சென்னி கோடி கோடி மணி - பலவாய நாகங்களின் தலையில் உள்ள கோடிக்கணக்கான மாணிக்கங்கள்; பல கொண்டு செய்த வகையால் - பலவற்றைக் கொண்டு செய்துள்ள தன்மையால்; மின்னால் இயன்றது எனலாய் விளங்கு - மின்னலினால் செய்யப்பட்டுள்ளது என்று கூறும்படி விளங்குகின்ற; மிளிர் பூண் வயங்க - ஒளி வெளியிடும் அணிகலன்கள் விளங்கவும்; வெயில்கால் - (செவ்விய) ஒளியை வெளிப்படுத்துகிற; பொன்னால் இயன்ற - பொன்னால் ஆகிய; நகை ஓடை பொங்க - பொலிவு உடைய நெற்றிப்பட்டம் ஒளி வெளியிடவும்; வனமாலை மார்பு புரள - (பல்வகை இலைகளால் தொடுக்கப்பட்ட) வனமாலை மார்பில் அசையவும்; தொல் நாள் பிரிந்த துயர் தீர - நீண்டநாள் பிரிந்து இருந்த துன்பம் நீங்கவும்; அண்ணல் - தலைவன் ஆகிய இராமனது; திருமேனி கண்டு தொழுவான் - திருமேனியைக் கண்டு தொழுபவனாயினன்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- With bright ornaments shining as if made of lightning, wrought
- from crores upon crores of gems taken from the heads of many serpents, with the frontlet
- of gold, casting rays, glowing with splendour, with the forest garland rolling on his chest,
- so that the grief of long separation might end, seeing the lord's holy form, he bowed.
What the poem says
Garuḍa wears ornaments made from jewels taken from the hoods of countless serpents, his enemies, so bright they seem made of lightning, together with a gold frontlet and the vaṉamālai, the forest garland of mixed leaves and flowers associated with Viṣṇu.
He has long been parted from his master during this human incarnation. Seeing Irāmaṉ's sacred form at last, he bows in worship.