கம்பராமாயணம் 8296 · யுத்த 18.249
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
முடி மேல் நிமிர்ந்து முகிழ் ஏறுகையன் - தலையின் மீது உயர்ந்து குவிதல் பொருந்திய கைகளை உடையவனாய், முகில் மேல் நிமிர்ந்த ஒளியான் - கருமேகத்தினும் மிக்க நீல நிறம் உடைய (இராமனது); அடிமேல் விழுந்து பணியாமல் - திருவடிகளில் விழுந்து (வெகுநாட்களாக) விழுந்து வணங்காமல்; நின்ற நிலை உன்னி உன்னி அழிவான் - (அந்த இராமன் துன்ப வடிவமாய்) நின்ற நிலையை எண்ணி எண்ணி வருந்துபவனாய்; கொடி மேல் இருந்து - (அவ்வவதார மூலத்தின்) கொடியின் மீது இருந்து; இவ் உலகு ஏழொடு ஏழு தொழ நின்ற - இந்தப் பதினான்கு உலகங்களும் தன்னை வணங்கும் படி நின்ற; கோளும் இலனாய் - பெருமையும் இல்லாதவனாய்; படி மேல் எழுந்து வருவான் - பூமியின் மேல் எழுந்து வருபவனாகிய கருடன்; விரைந்து - வேகமாக (இராமன் இருக்கும் இடம்) வந்து; நினைந்து - (அவனது திருக்கல்யாண குணங்களை) நினைத்து; பலகால் பணிவான் - பலமுறை வணங்கி (அடுத்த பாடலில் முடியும்.)
ஆங்கிலம் · English translationAI
Translation
- With his folded hands raised high above his crown, he, shining more radiant than the clouds,
- grieving again and again at the thought of how long he had stood without falling at his feet in worship,
- having no longer even the glory of sitting on the banner and standing to be worshipped by the fourteen worlds,
- came rising over the earth, swiftly, thinking of him many times, bowing.
What the poem says
Garuḍa approaches with hands folded above his head. He grieves that for so long he has not fallen at his master's feet.
In Viṣṇu's heaven Garuḍa sits on his master's banner and is honoured by all fourteen worlds; now he has given up that rank and comes swiftly over the earth, bowing repeatedly as he thinks of Irāmaṉ's virtues. The commentary notes that the sentence finishes in the next verse.