கம்பராமாயணம் 83 · பால 3.2

Section பால காண்டம் / 3. நகரப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1நில மகள் முகமோ! திலகமோ!! கண்ணோ!!! நிறை நெடு மங்கல நாணோ!!!
இலகுபூண் முலை மேல் ஆரமோ!!! உயிரின் இருக்கையோ!!! திருமகட்கு இனிய
மலர் கொல் ஓ!!! மாயோன் மார்பின் நல் மணிகள் வைத்த பொன் பெட்டி யோ!!! வானோர்
உலகின்மேல் உலகு ஓ!!! ஊழியின் இறுதி உறையுள் ஓ!!! யாது என உரைப்பாம்.

பொருள் · Meaning in Tamil

நிலமகள் முகமோ திலகமோ கண்ணோ - (அயோத்தி நகரமானது) நிலமகளது முகமோ! முகத்திலணிந்த திலகமோ! அவளுடைய கண்களோ! நிறை நெடுமங்கல நாணோ - நிறைவான நெடிய திருமாங்கலியக் கயிறோ?; இலகு பூண் முலைமேல் ஆரமோ - மார்பகங்களின் மேலணிந்து திகழும் மணிமாலையோ!; உயிரின் இருக்கையோ - அந்நில மகளின் உயிர் இருக்கும் இருப்பிடமோ?; திருமகட்கு இனிய மலர்கொலோ - திருமகளுக்கு வாழ்வதற்கினிய தாமரை மலரோ!; மாயோன் மார்பில் நன்மணிகள் வைத்த பொற் பெட்டியோ - திருமாலின் மார்பிலணியும் நல்ல மணிகள் வைக்கப்பட்ட பொன் பெட்டி தானோ!; வானோர் உலகின்மேல் உலகோ - விண்ணுலகினும் மேலான வைகுந்தமோ; ஊழியின் இறுதி உறையுளோ - யுகமுடிவில் உயிர்களெல்லாம் தங்கும் திருமாலின் திருவயிறோ?; யாதென உரைப்பாம் - வேறு எதுவென கூறுவோம்?

நிலமகளின் முகம், திலகம், கண், மங்கல நாண், ஆரம் முதலியனவாக அயோத்தி நகரத்தைப் புனைந்துரைத்தார். பெண்களும் மங்கல நாண் பெருமை தருவதாதலால் 'நிறைநெடு மங்கல நாண்' என்றார். சிறந்த உறுப்பான முகத்தை முதலில் கூறினார் விண்ணுலகத்தினும் சிறந்தது பரமபதமாதலின் 'வானோர் உலகின் மேலுலகோ' என்றார் அருத்தி: விருப்பம். ஒரே பொருளைப் பலவிதமாகக் கற்பித்த இப்பாடல் பலபடப் புனைவணி கொண்டது.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Is it the face of the Earth goddess? Her tilakam? Her eye? Her full, long marriage cord?
  2. The necklace on her jewelled breast? The seat of her life? For Tirumakaḷ, her sweet
  3. lotus? A golden casket holding the fine gems for Māyōṉ's chest? A world above
  4. the world of the gods? The dwelling at the end of the aeon? What shall we call it?

What the poem says

The poet piles up guesses about what Ayōttī really is. Perhaps it is the face of the Earth goddess, the auspicious mark on her forehead, her eye, her marriage cord, the necklace on her breast or the very seat of her life. Perhaps it is the lotus where Lakṣmī lives, or the casket that holds the jewels Vishnu wears. Perhaps it is Vaikuṇṭha, the world beyond heaven, or the shelter where all beings rest at the end of the aeon, the belly of Vishnu. He cannot settle on one answer. Describing a single thing through many fanciful identities is a recognised figure of speech.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1nilamakaḷ mukamō! tilakamō!! kaṇṇō!!! niṟai neṭu maṅkala nāṇō!!!
ilaku pūṇ mulaimēl āramō!!! uyiriṉ irukkaiyō!!! tirumakaṭku iṉiya
malarkolō!!! māyōṉ mārpil naṉ maṇikaḷ vaitta poṟ peṭṭiyō!!! vāṉōr
ulakiṉ mēl ulakō!!! ūḻiyiṉ iṟuti uṟaiyuḷō!!! yātu eṉa uraippām.