கம்பராமாயணம் 8301 · யுத்த 18.254
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
மறையோய் - வேத வடிவானவனே; வாணாள் அளித்தி - உலகில் உள்ள உயிர்களுக்கு எல்லாம் (வினைக்குத்தக) வாழும் நாளைக் கொடுக்கின்றாய்; முடியாமல் - எக்காலத்திலும் அழியாமல்; நீதி வழுவாமல் நிற்றி - அறநெறி தவறாமல் நிற்கிறாய்; உனக்கு ஒரு பொருள் வேண்டும் என்று பேணாய் - (குறைவிலா நிறைவாக நீ இருப்பதால்) உனக்கு (வேறு ஒரு) பொருள் வேண்டும் என்று (நீ விரும்புவதில்லை; பெறுவான் அருத்தி பிழையாய் - (உன்னடியாற் பெறுவதற்கு விரும்பும் பொருள்களைத் தவறாமல் கொடுப்பாய்; ஊண் ஆய் - நுகர் பொருளாகவும்; உயிர்க்கு உயிர் ஆகி - உயிருக்கு உயிராகவும்; உணர்வு ஆய - ஐம்புல உணர்வுகளுக்கும் அரிய ஆய; பெண்ணின் உரு ஆய் - பெண்ணின் உருவாகியும், ஆண் ஆகி - ஆணின் வடிவம் ஆகியும்; மற்றும் - அவையல்லாமல்; அலி ஆதி - அலியின் வடிவமாகியும்; நிற்றி - நிற்கின்றாய்; இவ் அதிரேகமாயை - இந்த மிக்க மாயச் செயலை; அறிவார் யார் - அறிபவர் யாவர்?
திருமாலின் பண்புகளாகிய (1) வினைக்கேற்ற பயன் தருதல் (2) அழியாப் பெருநிலை (3) மறைகளால் உணரப்பட்டு மறை வடிவினன் ஆதல் (4) குறைவிலா நிறைவாக எல்லாப் பொருளும் உடையவன் ஆக இருத்தல் (5) அடியவர்க்கு வேண்டுவன வேண்டியவாறு தருதல் (6) நுகர் பொருள்கள் ஆதல் (7) பல் உருவினன் ஆதல் (8) எல்லாப் பொருள் உருவங்களும் தன் உருவமாதல் என்பவை இப்பாடலில் கூறப்பட்டுள்ளன.
ஆங்கிலம் · English translationAI
Translation
- You grant the span of life, and never end; you stand without swerving from justice, O you who are the Veda;
- you never seek any thing for yourself; you never fail to give what seekers long for;
- you are food, you stand as the life of life; beyond the senses, you take the form of a woman,
- of a man, and of one who is neither! Who can know this surpassing illusion?
What the poem says
Karuṭaṉ lists the qualities of Tirumāl. He gives each being the lifespan its deeds have earned, is himself undying, embodies the Vedas and never departs from justice. He lacks nothing and desires nothing, yet never fails to grant what his devotees ask.
He is the food that sustains creatures and the life within their lives. He takes every form, female, male and neither, since all forms are his. The commentary counts eight such attributes in the verse.