கம்பராமாயணம் 8302 · யுத்த 18.255

Section யுத்த காண்டம் / 18. நாகபாசப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1 “ “
‘‘
‘‘

பொருள் · Meaning in Tamil

மறைநாலும் - வேதங்கள் நான்கும்; அந்தம் அறியாது - உண்மை முடிவு தெரியாத காரணத்தால்; ஒன்று - (அவற்றில்) ஒரு மறை; தான் அந்தம் இல்லை பல என்னும் - உன் சொரூபம் எல்லையில்லாத பல படித்தானது என்று கூறும்; ஒன்று - பிறிதொரு மறை; தனி என்னும் - ஒரே மூர்த்தம் என்று கூறும்; ஒன்று - பிறிதொரு மறை; தவிரா ஞானம் தொடர்ந்த சுடர் என்னும் - நீங்காத ஞானம் பொருந்திய ஒளி என்று கூறும்; ஒன்று - மற்றொரு மறை; நயனம் தொடர்ந்த ஒளியால் வானம் தொடர்ந்த பதம் என்னும் - புறக்கண்ணால் காணக் கூடிய ஒளி வடிவாகி ஆகாயத்தை இடமாகக் கொண்டு பொருந்தி உள்ளது என்று கூறும்; மறை நாலும் - இவ்வாறு வேதங்கள் நான்கும்; அந்தம் அறியாது - உண்மைத் தன்மையை அறிய முடியாமல்; ஆனந்தம் என்னும் - பேரானந்த மயமானது என்னும்; அயல் என்னும் - வாக்கு காயங்களுக்குக் கோசரமாகாதது என்றும் கூறித் தடுமாறும் ஆகவே; இவ் அதிரேகமாயை - இந்த மிக்கமாயச் செயலை; ஆர் அறிவார் - யார் அறிவார்கள்.

திருமால் இப்படியன் இந்நிறத்தன் இவ்வண்ணத்தன் என்று சுட்டி உணரப்படாது வேதம் கிடந்து தடுமாறும் வஞ்சவெளியாக இருப்பதை இப்பாடல் உணர்த்தி நிற்கிறது.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. One Veda says, He has no end; he is many; another says, He is one; another says, He is
  2. the flame joined with unfailing knowledge; another says, He is the place that fills the sky
  3. with light the eye can see; so the four Vedas, not knowing your end,
  4. say, He is bliss, and say, He is beyond. Who can know this surpassing illusion?

What the poem says

Karuṭaṉ says that even the four Vedas cannot grasp Tirumāl. One calls him endless and manifold, another the single One, another a light of unfailing knowledge, another a visible radiance that fills the sky.

In the end they settle on calling him bliss itself, and on saying he lies beyond speech and mind. The commentary remarks that the god who cannot be pinned down by form or colour leaves the scriptures themselves at a loss.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1“tāṉ antam illai; pala “ eṉṉum, oṉṟu; “taṉi “ eṉṉum, oṉṟu, “tavirā
ñāṉam toṭarnta cuṭar ‘‘ eṉṉum, oṉṟu; ‘‘nayaṉam toṭarnta oḷiyāl,
vāṉam toṭarnta patam ‘‘ eṉṉum, oṉṟu; maṟai nālum antam aṟiyātu,
“āṉantam“ eṉṉum, “ayal“ eṉṉum! ār iv atirēka māyai aṟivār?