கம்பராமாயணம் 8304 · யுத்த 18.257

Section யுத்த காண்டம் / 18. நாகபாசப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

ஒன்று சொல் உரைத்தி - ஒப்பற்ற நாதவடிவினன் என்று சொல்லப்படுகிறாய்; பொருள் ஆதி - சொற்களின் பொருளும் ஆகிறாய்; தூய மறையும் துறந்து திரிவாய் - தூய்மையான வேதங்களையும் கடந்து விளங்குகிறாய்; வில் ஒன்று எடுத்தி சரம் ஒன்று எடுத்தி - (அறம் தலை நிறுத்துதற்காகக் கையில்) வில் ஒன்றை ஏந்தியுள்ளாய்; (அதில் வைத்துத் தொடுப்பதற்காக) ஒப்பற்ற அம்புகளையும் கைக்கொண்டு இருக்கிறாய்; அங்கை மிளிர் சங்கம் உடையாய் - அழகிய கைகளில் ஒளி பொருந்திய (பாஞ்ச சன்னியம் என்ற) சங்கினைக் கையில் ஏந்தியுள்ளாய்; கொல் என்று உரைத்தி - (தீயவர்க்குப் பகைவனாய் இருந்து) கொல்லுக என்று சொல்லுகிறாய்; கொலையுண்டு நிற்றி - (நீயே பகைவராய் இருந்து) கொல்லப்பட்டுக் கடக்றொய்; கொடியாய் - (இவ்வாறு) முரண் பல கொண்டவனே; உன்மாயை அறியேன் - உனது மாயச் செயல்களை எவ்வகையிலும் என்னால் அறியமுடியவில்லை; அல் என்று நிற்றி - (நீ இரவு என்று கூறும்படியும் நிற்கின்றாய், இவ் அதிரேகமாயை - இந்த மிக்க மாயச்செயலை; ஆர் அறிவார் - யார் அறிவார்கள்.

இப்பாடல் முரண்களின் சேர்க்கையாக இறைவனை விளக்க முயல்கிறது. திருமால், சொல், பொருள் கொலை செய்பவன், கொல்லப்படுபவன், இரவு பகல் ஆகியவைகளாக இருக்கிறான் என்று கூறி அனைத்தும் கடவுளின் சொரூபம் என்று விளக்குகிறார்

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. You utter the word, and you are its meaning; you go beyond even the pure Veda;
  2. you take up a bow, you take up an arrow; in your fair hand you hold the gleaming conch;
  3. you say Kill, and you stand as the one who is killed; O cruel one, I cannot know your illusion;
  4. you stand as night, and you are day! Who can know this surpassing illusion?

What the poem says

Karuṭaṉ describes God through paradoxes. Tirumāl is both the word and its meaning. He passes beyond the Vedas, yet carries a bow, arrows and the conch Pāñcajanya to uphold dharma.

He commands slaughter, and he is also the one slain; he is night and he is day. Calling him cruel here means one full of contradictions. The point is that everything, killer and killed alike, is a form of God.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1col oṉṟu uraitti; poruḷ āti; tūya maṟaiyum tuṟantu, tirivāy;
vil oṉṟu eṭutti; caram oṉṟu eṭutti; miḷir caṅkam aṅkai uṭaiyāy!
‘kol ‘eṉṟu uraitti; kolaiyuṇṭu niṟṟi; koṭiyāy uṉ māyai aṟiyēṉ;
al eṉṟu niṟṟi; pakal āti! ār, iv atirēka māyai aṟivār?