கம்பராமாயணம் 8305 · யுத்த 18.258

Section யுத்த காண்டம் / 18. நாகபாசப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1‘மறந்தாயும் ஒத்தி; மறவாயும் ஒத்தி; மயலாரும் யானும் அறியேன்
துறந்தாயும் ஒத்தி; துறவாயும் ஒத்தி; ஒருதன்மை சொல்ல அரியாய்;
பிறந்தாயும் ஒத்தி, பிறவாயும் ஒத்தி, பிறவாமல் நல்கு பெரியோய்!
அறம்தான் நிறுத்தல் ஆரிது ஆக! ஆர், இவ் அதிரேக மாயை அறிவார்?

பொருள் · Meaning in Tamil

பிறவாமல் நல்கு பெரியோய் - (பத்துடை அடியவர்கள்) மற்றீண்டு வாராம் பிறவாத பெருநெறி தருகின்ற பெரியவனே! மறந்தாயும் ஒத்தி - (நீ (உன் உண்மைத் தன்மையை) மறந்தவன் போலவும் காட்சி தருகிறாய்; மறவாயும் ஒத்தி - (அவதார நோக்கமாகிய பாவத்தை அழிக்க எண்ணியிருப்பதால்) உன் உண்மை நிலையை மறவாதவன் போலவும் இருக்கிறாய்; மயல் - (இத்தன்மையான உனது) மாயைச் செயலை; ஆரும் - (உலகத்தவர் யாவரும்; யானும் - நானும்; அறியேம் - அறிய முடியாதவர்களாய் உள்ளோம்; துறந்தாயும் ஒத்தி - (பற்றற்று இருத்தலால்) துறந்தவன் போலவும் இருக்கிறாய்; துறவாயும் ஒத்தி - (தம்பி கட்டுண்டமை கண்டு வருந்தி அழுதலால்) துறவாதவன் போலவும் இருக்கிறாய்; ஒரு தன்மை சொல்ல அரியாய் - (இவ்வாறு இருத்தலினால்) ஒரு தன்மை உடையவன் என்று சொல்ல அரியவனாக விளங்குகிறாய்; பிறந்தாயும் ஒத்தி - (தசரதன் மதலையாய்த் தாரணி வந்ததால்) பிறந்தவன் போலவும் இருக்கிறாய்; பிறவாயும் ஒத்தி - (வினை வசத்தால் பிறவாமையின்) பிறவாதவன் போலவும் விளங்குகிறாய்; அறம் தான் நிறுத்தல் அரிது ஆக - அறத்தை இவ்வுலகில் நிலை நிறுத்தல் அருமை ஆக இருப்பதால் (அதனை நிலை நிறுத்த மானிடச் சட்டை தாங்கி வந்தவனே); இவ் அதிரேக மாயை - இந்த மிகுதியான மாயச் செயலை; ஆர் அறிவார் - யார் அறிவார்கள்.

தன் சொரூபத்தை மறந்தும் மறவாதும், பிறந்தும் பிறவாதும் உள்ள இறை நிலை இப்பாடலில் விளக்கிக் கூறப்படுகிறது. திருமால் மனிதனாய் அவதரித்து மனிதனைப் போலவே இன்ப துன்பங்களுக்கு ஆட்பட்டமை கொண்டு இவ்வாறு கூறினார் என்க.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. You seem to have forgotten, and you seem not to have forgotten; your bewildering play neither anyone nor I can know;
  2. you seem to have renounced, and you seem not to have renounced; you are hard to name by any single nature;
  3. you seem to have been born, and you seem unborn, great one who grants freedom from birth!
  4. Since upholding dharma is so hard — who can know this surpassing illusion?

What the poem says

Karuṭaṉ goes on with his hymn. Irāmaṉ seems to have forgotten his divine nature, yet never loses sight of the purpose of his descent, the destruction of evil. He seems detached, yet weeps at his brother's binding.

He was born as the son of Tacarataṉ, yet he is unborn, since no karma compels his birth, and he gives his devotees release from birth. He has put on a human body only because dharma is so hard to establish in the world.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1‘maṟantāyum otti; maṟavāyum otti; mayal ārum yāṉum aṟiyēm
tuṟantāyum otti; tuṟavāyum otti; oru taṉmai colla ariyāy;
piṟantāyum otti, piṟavāyum otti, piṟavāmal nalku periyōy!
aṟamtāṉ niṟuttal aritu āka! ār, iv atirēka māyai aṟivār?