கம்பராமாயணம் 8306 · யுத்த 18.259

Section யுத்த காண்டம் / 18. நாகபாசப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1‘வினைவர்க்கு முற்றும் உடனே படைத்தி; அவைசெய்தி, ஒன்றும் விழையாய்
நினைவர்க்கு, நெஞ்சின் உறு காமம் முற்றி, அறியாமை நிற்றி; நிமிரா;
முனைவர்க்கும் முத்தி, அமரர்க்கும் ஒத்தி, முழுமூடர் என்றும் முதலோர்
அனைவர்க்கும் ஒத்தி, அறியாமை ஆர் இவ் அதிரேக மாயை அறிவார்?

பொருள் · Meaning in Tamil

வினைவர்க்கம் முற்றும் - (உயிர்களின் பாவ புண்ணியங்களாகிய) இருவினைகளின் தொகுதிகளுக்கு உரியபடி; உடனே படைத்தி - (அந்த உயிர்களை உடனே தக்க) உடல் எடுக்கச் செய்து படைக்கின்றாய்; அவை எய்தி - அந்த உடம்புகளை அடைந்து; நினைவர்க்கு - (உன் திருவடியையே) நினைக்கும் பக்தர்களுக்கு; என்றும் - எப்பொழுதும்; நெஞ்சின் உறுகாமம் முற்றி - (அவர்கள்) மனத்தில் உள்ள (எவ்வகை) விருப்பத்தையும் நிறைவேற்றி; அறியாமை நிற்றி - (அவர்கள்) அறியாமல் நிற்கின்றாய், மனமா - மனமாகவும் (மறைந்துள்ளாய்); முனைவர்க்கும் ஒத்தி - முனிவர்களுக்கும் ஒத்து விளங்குகிறாய், அமரர்க்கும் ஒத்தி - தேவர்களுக்கும் ஒத்து விளங்குகிறாய்; முழுமூடர் என்னும் முதலோர் அனைவர்க்கும் - முழு அறிவிலிகள் என்னும் மற்ற பிறராகிய அனைவருக்கும்; அறியாமை ஒத்தி - அறிய முடியாத தன்மையால் ஒத்து விளங்குகிறாய்; இவ் அதிரேக மாயை - இந்த மிகுதியான மாயச் செயலை; ஆர் அறிவார் - யார் அறிவார்கள்.

மலத்தால் இலயித்த ஆன்மாக்களை வினைக்கேற்ப உடம்பு அருளிய இறைவன் உடம்பு எடுத்த ஆன்மாக்களின் ஈடேற்ற நினைப்பிற்கு ஏற்ப இருவினையை அழித்து முத்தி அளிக்கின்றான். எனினும் அவ்வான்மாக்கள் அச்செயலை வெளிப்பட உணர்ந்து கொள்ள முடிவதில்லை. என இறைத்தன்மையும் செயலும் கூறியபடி காண்க.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. You create at once the full classes of beings, as their deeds require; entering those bodies, you never cease
  2. for those who think of you to fulfil every desire their hearts hold, and you stand unknown to them; you are the mind;
  3. you seem one with the sages, one with the immortals, and with all the rest who are called utter fools
  4. you are alike in being unknown. Who can know this surpassing illusion?

What the poem says

Karuṭaṉ says that God gives every soul a body suited to its past deeds, dwells within those bodies, and fulfils the wishes of devotees who think of him, all without being seen.

He is the same to sages, gods and the ignorant alike, for none of them can truly know him. The commentary explains that God destroys the karma of embodied souls and grants them release, yet the souls cannot clearly see him doing it.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1‘viṉai varkkam muṟṟum uṭaṉē paṭaitti; avai eyti, eṉṟum viḻaiyāy
niṉaivarkku, neñciṉ uṟu kāmam muṟṟi, aṟiyāmai niṟṟi; maṉamā;
muṉaivarkkum otti, amararkkum otti, muḻu mūṭar eṉṉum mutalōr
aṉaivarkkum otti, aṟiyāmai ār iv atirēka māyai aṟivār?