கம்பராமாயணம் 8307 · யுத்த 18.260

Section யுத்த காண்டம் / 18. நாகபாசப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1‘எறிந்தாரும் ஏறு படுவாரும், இன்ன பொருள்கண்டு இரங்குபவரும்,
செறிந்து ஆயது உண்மை எனல் ஆய தன்மை தெரிகின்றது, உன்தன் இடையே;
பிறிந்தார் பிறிந்த பொருளோடு போதி; பிறியாது நிற்றி பெரியோய்!
அறிந்தார் அறிந்த பொருள் ஆதி ஆர் இவ் அதிரேக மாயை அறிவார்?

பொருள் · Meaning in Tamil

பெரியோய் - பெரியவனே; எறிந்தாரும் - (படைக்கலங்களை) எறிபவர்களும்; ஏறுபடுவாரும் - (அந்தப் படைக்கலங்களால் காயம் படுபவர்களும்; இன்ன பொருள் கண்டு இரங்குபவரும் - இத்தகைய செயலைக் கண்டு இரங்குபவர்களும்; செறிந்தாரின் - (இங்கு இவ்வுலகில்) நெருங்கி (இருந்து) வாழ்பவர்கள் இடத்திலும்; உண்மை எனல் ஆயதன்மை - (நீ) ஒருங்கு கலந்திருப்பது உண்மை என்ற செய்தி; உன்னது இடையே தெரிகின்றது - உன்னிடத்தில் தெரிகின்றது; பிறிந்தார் பிறிந்த பொருளோடு போதி - அறிவில் இருந்து பிரிந்தவர்கள் நீக்கியுள்ள ஞானமாகிய பொருளுடன் நீயும் (அவர்களிடம் இருந்து) பிரிந்து போகின்றாய்; பிறியாது நிற்றி - அவ்வாறு பிரிந்து இருந்தாலும் கூட அவர்கள் இடத்திலும் அந்தர்யாமியாகப் பிரியாமல் நிற்கிறாய்; அறிந்தார் அறிந்த பொருள் ஆதி - தத்துவ ஞானமுடையவர்கள் (உண்மை உணர்வால்) ஆய்ந்து அறிந்த மெய்ப்பொருளாகவும் விளங்குகிறாய்; இவ் அதிரேகமாயை - இந்த மிகுதியான மாயையை, ஆர் அறிவார் - யார் அறிவார்கள்.

எல்லாப் பொருள்களிலும் வேறுபாடு இன்றி ஒரு தன்மைத்தாய் அந்தர்யாமியாய் இறைவன் கலந்தும் கரைந்தும் உள்ளான் என்றும், அவன் உண்மை அறிவினர்க்கே விளங்கித் தோன்றும் என்றும் அறிவற்ற அஞ்ஞானிகளுக்கு விளங்கித் தோன்ற மாட்டாது என்றும் விளக்கிக் கூறியவாறு.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Those who hurl weapons, those who are struck, and those who grieve at the sight of such things —
  2. the truth that you dwell in all who throng this world is seen in you;
  3. with those who part from knowledge you depart, along with what they forsake; yet you stand unparted, great one!
  4. You are the thing that the knowers know. Who can know this surpassing illusion?

What the poem says

God is present in the warrior who strikes, in the one who is wounded, and in the onlooker who pities them both. He lives inside every creature.

He seems to leave those who turn away from wisdom, yet as the inner controller he never leaves even them. To those who have true knowledge he is the reality they have come to know. The commentary sums up: God pervades everything without distinction, but only the wise perceive him; the ignorant do not.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1‘eṟintārum ēṟupaṭuvārum, iṉṉa poruḷ kaṇṭu iraṅkupavarum,
ceṟintāriṉ uṇmai eṉal āya taṉmai terikiṉṟatu, uṉṉatu iṭaiyē;
piṟintār piṟinta poruḷōṭu pōti; piṟiyātu niṟṟi periyōy!
aṟintār aṟinta poruḷ āti ār iv atirēka māyai aṟivār?