கம்பராமாயணம் 8308 · யுத்த 18.261
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
பேர் ஆயிரங்கள் உடையாய் - ஆயிரம் திருப்பெயர்களை உடையவனே; பிறந்த பொருள் தோறும் - தோன்றிய பொருள்கள் இடத்தில் எல்லாம்; பிரியாய் நிற்றி - பிரியாமல் கலந்து நிற்கின்றாய், தீராய்- அழிவு அற்றவனே; பிரிந்து திரிவாய் - பல்வேறு அவதாரங்களால் உன் உண்மை சொரூபத்தில் இருந்து பிரிந்து வந்து திரிகின்றாய்; திறம் தொறு அவை தோறும் என்று தெளியாய் - அந்த அவதாரங்களில் எல்லாம் அப்பொருள்கள் உன்னைத் தம் இனம் என்று மயங்கி நிற்றல் அன்றி உன் உண்மை நிலையை அறியும் படி தெளியப்படாத நிலையில் உள்ளாய்; அம்கை கூர் ஆழி உடையாய் - அழகிய கைகளில் கூர்மையான சுதர்சனம் என்னும் சக்கரப் படையைக் கைக்கொண்டு உள்ளாய்; திரண்டு ஓர் உரு ஆதி - அனைத்துப் பொருள்களும் திரண்டு ஓர் உருவம் ஆகிறாய்; ஆராயின் - எண்ணிப் பார்த்தால்; கோடல் உரிபோல் ஏதும் இலையாதி - வெண் காந்தள் கிழங்கை உரிப்பதைப் போல ஒன்றும் இல்லாதவன் ஆகிறாய், இவ் அதிரேகமாயை - இந்த மிகுதியான மாயச்செயலை; ஆர் அறிவார் - யார் அறிவார்கள்.
திருமால் ஒவ்வொரு அவதாரத்திலும் அந்தந்த அவதாரத்திற்கு ஒத்த செயலும் பண்பும் கொண்டு நடிப்பதால் திறம் தொறு அவை தோறும் என்று தெளியாய் என்றார். முன் கூறப்பட்ட பதினொரு பாடல்கள் ஆர் இவ் அதிரேகமாயை அறிவார் என முடிந்தன.
ஆங்கிலம் · English translationAI
Translation
- You who have a thousand names; you stand in every thing that is born, never apart;
- you never end; you part from yourself and roam, and in each form and each work you leave them unclear;
- you hold the sharp discus in your fair hand; you gather into one single form; like a peeled bulb of the kōṭal,
- if one inquires, you become nothing at all. Who can know this surpassing illusion?
What the poem says
This verse closes the run of eleven verses that end with the refrain 'who can know this surpassing illusion?' Tirumāl has a thousand names, is present in every created thing and is imperishable. He leaves his true form to wander in many incarnations. In each one he acts and behaves to suit the part, so that beings take him for one of their own and do not see who he is.
He carries the discus Sudarśana. All things come together in him as one form, yet when one searches for him he turns out to be nothing graspable. He is like the kōṭal (white glory-lily) bulb, which is peeled layer after layer until nothing is left.