கம்பராமாயணம் 8309 · யுத்த 18.262

Section யுத்த காண்டம் / 18. நாகபாசப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1என்று, இன்ன பன்னி அழிவான், எறிந்த எரிசோதி கீற, இருள்போய்,
பொன் துன்னி அன்ன வெயில் வீசுகின்ற பொருள் கண்டு, நின்ற புகழோன்
நின்று உன்னி உன்னி, ‘இவன் யாவன்? ‘என்று நிமிர்கின்ற எல்லை, நிமிரச்
சென்று, உன்னும் முன்னம், உடன் ஆயினான், இவ் உலகு ஏழும் மூடு சிறையான்.

பொருள் · Meaning in Tamil

என்று இன்ன பன்னி - என்று இவ்வாறான சொற்களைப் பல முறை கூறித் (துதித்து); அழிவான் - மனமழிபவனாகிய கருடன்; எறிந்த எரி சோதி கீற - (வந்ததனால்) வீசிய உடம்பின் ஒளி கிழித்ததனால்; இருள்போய் - இருட்டு நீங்கி; பொன் துன்னி அன்ன - பொன்னின் ஒளி நெருங்கியது போல; ஒளி வீசுகின்ற பொருள் கண்டு - (எங்கும் சிவந்த) ஒளி பரவி வீசுகின்ற தன்மையைக் கண்டு; நின்ற புகழோன் - (மாறாது நிலை பெற்று) நிற்கும் புகழுக்கு உரியவன் ஆகிய இராமன்; நின்று உன்னி உன்னி - (அதைப் பார்த்துக்கொண்டு) நின்று எண்ணி எண்ணி; இவன் யாவன் என்று நினைக்கின்ற எல்லை - இவன் யார்? என்று நினைத்து நிற்கின்ற பொழுது; இவ் உலகு ஏழும் மூடு சிறையான் - இந்த உலகங்கள் ஏழினையும் மூடும் படியாக மிக விரித்த சிறகுகளை உடைய அந்தக் கருடன்; நிமிரச் சென்று - நேராகச் சென்று; உன்னும் முன்னம் உடன் ஆயினான் - நினைப்பதற்கு முன்பே இராமனிடம் சென்று சேர்ந்தான்.

பொன் துன்னி அன்ன வெயில்- பொன் போன்ற நிறமுடைய கருடனின் உடம்பில் இருந்து வருகின்ற ஒளி.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. So he repeated these words, overcome; the blazing light he shed split the dark, which fled;
  2. seeing that brightness, like gold pressed close, the one of lasting fame stood
  3. thinking and thinking, Who is this?, and even as he thought, rising straight
  4. he came to his side before thought could follow — the one whose wings cover these seven worlds.

What the poem says

Karuṭaṉ has finished his hymn. The golden radiance of his body tears through the darkness of the battlefield. Irāmaṉ, whose fame never fades, stands wondering who this shining being can be.

Before the thought is complete, Karuṭaṉ, whose spread wings could cover all seven worlds, has flown straight to him and is at his side. The golden glow is the light of Karuṭaṉ's gold-coloured body.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1eṉṟu, iṉṉa paṉṉi aḻivāṉ, eṟinta eri cōti kīṟa, iruḷ pōy,
poṉ tuṉṉi aṉṉa veyil vīcukiṉṟa poruḷ kaṇṭu, niṉṟa pukaḻōṉ
niṉṟu uṉṉi uṉṉi, ‘ivaṉ yāvaṉ? ‘eṉṟu niṉaikiṉṟa ellai, nimirac
ceṉṟu, uṉṉummuṉṉam, uṭaṉ āyiṉāṉ, iv ulaku ēḻum mūṭu ciṟaiyāṉ.