கம்பராமாயணம் 8310 · யுத்த 18.263

Section யுத்த காண்டம் / 18. நாகபாசப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

பதகன் துரந்த உரகம் - பாதகனாகிய இந்திரசித்தன் (இலக்குவன் மீது வானரப் படைமீதும்) செலுத்திய பாம்புக்கணை; மழை என்று ஆசங்கை கொண்ட - மேகங்கள் என்று ஐயம் கொள்ளுவதற்கு இடமாக உரிய; கொடை மீளி அண்ணல் - கொடை கொடுப்பதில் வலிமை மிக்க பெரியோன் ஆகிய; சரராமன் - சடையப்ப வள்ளலுக்கு உரிய; வெண்ணை அணுகும் - திருநெல்வெண்ணெய் எனும் ஊரை நெருங்கிச் சேர்ந்த; தேசம் கலந்த மறை வாணர் - தேசஸ் ஆகிய ஒளி பொருந்திய அந்தணர்களும்; செஞ்சொல் அறிவாளர் - செவ்விய கூரிய சீரிய செஞ்சொல் புலவர்களும்; என்று இம்முதலோர் - என்று இவர்களை முதலாகக் கொண்ட சுற்றத்தார்கள்; பாசம் கலந்த பசி போல் - அடைந்துள்ள பசிபோல்; அகன்ற - இருந்த இடம் தெரியாது மறைந்து விட்டது; (அவ்வாறு துண்டுபட்டு அழிந்து மறைந்த நாகங்களை) வாசம் கலந்தமரை - மணம் பொருந்திய தாமரை மலரினது; நாள நூலின் வகை - தண்டின் உள்ளே உள்ள மெல்லிய நூலின் தன்மையை அடைந்து விட்டது; என்பது என்னை - என்று சொல்லுவது என்ன சிறப்பு உள்ளது.

இராம சரிதத்தின் இடையில் தன்னை ஆதரித்துக் காத்த வள்ளலின் சிறப்பைப் பாடிய கம்பரின் செய்நன்றி மறவாச் செம்மை உள்ளத்தை எண்ணுக. நேரடியாக வள்ளலைச் சிறப்பித்தல், மறை முகமாக உவமை கூறிச் சிறப்பித்தல் என்ற இரண்டு வகையாகக் கவிஞர் இக்காப்பியத்தில் சடையப்ப வள்ளலைச் சிறப்பித்து உள்ளார்.

வெண்ணெய் - திருநெல்வெண்ணை என்னும் தலம். தேவாரப்பாடல் பெற்றது. சிக்கல் என வழங்கும்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Why say they became like the thread in the fragrant lotus's stalk? The lord bold in giving, whom men
  2. take in doubt for a rain-cloud, the Rāma of Veṇṇey, near whom
  3. the radiant masters of the Veda and the knowers of fine speech and others like them
  4. lost their hunger, bound up with want — so vanished the serpents the wicked one had sent.

What the poem says

As Karuṭaṉ arrives, the serpent-arrows that Intiracittu loosed on Ilakkuvaṉ and the monkey army disappear. The poet says it is not enough to call them as thin as the fibres inside a lotus stalk. They vanished the way hunger vanishes from the scholars and poets who come near the generous lord of Veṇṇey.

That lord is Caṭaiyappa Vaḷḷal of Tiruveṇṇeynallūr, Kampaṉ's patron, so generous that people mistake him for a rain-cloud. The commentary praises the poet for remembering his benefactor in the middle of the epic, here through a simile.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1vācam kalanta marai nāḷa nūliṉ vakai eṉpatu eṉṉai? maḻai eṉṟu
ācaṅkai koṇṭa koṭai mīḷi aṇṇal cararāmaṉ veṇṇey aṇukum,
tēcam kalanta maṟaivāṇar, ceñ col aṟivāḷar; eṉṟu im mutalōr
pācam kalanta pacipōl akaṉṟa patakaṉ turanta urakam.