கம்பராமாயணம் 8311 · யுத்த 18.264

Section யுத்த காண்டம் / 18. நாகபாசப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1பல் ஆயிரத்தின் முடியாத பக்கம் அவை வீச வந்து படர்கால்
செல்லா நிலத்தின் இருளாதல், செல்ல, உடல் நின்ற வாளி சிதறுற்று,
எல்லா விதத்தும் உணர்வோடும் எண்ணி அறனே இழைக்கும் உரவோன்
வல்லான் ஒருத்தன் இடையே படுத்த வடு ஆன, மேனி வடுவும்.

பொருள் · Meaning in Tamil

பல்லாயிரத்தின் முடியாத - பல ஆயிரக்கணக்கிலும் அடங்கி முடியாத; பக்கம் அவை வீச - இறகுகளை உடைய இரண்டு சிறகுகளும் அடித்துக் கொள்வதால்; வந்து படர் கால் - வந்து பரவுகின்ற காற்றானது; செல்லா நிலத்தின் - (நாகக் கணையால் கட்டுண்டு விழுந்து கிடப்பவர்களின் பெரும் குவியலால்) செல்ல முடியாமல் உள்ள நிலத்தில் நெருங்கி உள்ள; இருள் ஆதல் செல்ல - இருட்டு நீங்கிப் போகும்படி வீசுதலினால்; உடல் நின்ற வாளி சிதறுற்று - (இலக்குவன் முதலிய வானர வீரர்களுடைய) உடலில் குத்தி நின்ற அம்புகள் சிதறிப் போயின; மேனி வடுவும் - (அவர்களின் உடலங்களில் ஏற்பட்ட பழியாகப் பொருந்திய உடல் தழும்புகளும்); எல்லா விதத்தும் - எல்லா வகையிலும்; உணர்வோடு நண்ணி - அறிவோடு பொருந்தி; அறனே இழைக்கும் உரவோன் - அறத்தையே செய்யும் மன வலிமை மிக்க; வல்லான் - வல்லமை உடைய; ஒருத்தன் இடையே படுத்த - ஒரு ஞானியின் பால் இடையில் தோன்றிய; வடுவான - பாவத்தைப் போல் நீங்கின.

ஞானிகளின் பாவம் அவன் அருளால் நீங்குவது போல, இலக்குவன் முதலியோர்க்கும் நாக பாசமும், தழும்புகளும் கருடனின் சிறகுக்காற்றால் நீங்கின என்பது கருத்து.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. The wind that came spreading as the wings, with feathers beyond many thousands, beat,
  2. drove off the darkness of the ground where none could pass; the arrows lodged in their bodies scattered;
  3. and the scars on their bodies went, like the blemish that falls by the way on one mighty man,
  4. strong of mind, who meets all things with understanding and does only what is right.

What the poem says

The wind from Karuṭaṉ's beating wings sweeps over the battlefield. The ground there is impassable, piled with the bodies of Ilakkuvaṉ and the monkey warriors felled by the serpent-weapon. The darkness lifts and the arrows stuck in their bodies fall away.

Even their scars vanish. The poet compares this to the sin that can fall by chance on a wise and righteous man and is removed by God's grace.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1pallāyirattiṉ muṭiyāta pakkam avai vīca vantu paṭar kāl
cellā nilattiṉ iruḷātal, cella, uṭal niṉṟa vāḷi citaṟuṟṟu,
ellā vitattum uṇarvōṭu naṇṇi aṟaṉē iḻaikkum uravōṉ
vallāṉ oruttaṉ iṭaiyē paṭutta vaṭu āṉa, mēṉi vaṭuvum.