கம்பராமாயணம் 8313 · யுத்த 18.266

Section யுத்த காண்டம் / 18. நாகபாசப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1இளையான் எழுந்து தொழுவானை, அன்பின், இணை ஆர மார்பின் அணையா,
‘விளையாத துன்பம் விளைவித்த தெய்வம் வெளிவந்தது ‘என்ன வியவா,
இளையார்கள் அன்ன துணையோரை, ஆவி கெழுவா, எழுந்து தழுவா
முளையான திங்கள் உகிரான்முன் வந்து, முறைநின்ற வீரன் மொழிவான்.

பொருள் · Meaning in Tamil

முறை நின்ற வீரன் - அறமுறையில் நின்ற வீரனாகிய இராமன்; எழுந்து இளையான் தொழுவானை - மயக்கம் நீங்கி எழுந்து வணங்குபவனான இளையவனாகிய இலக்குவனை; அன்பின் - அன்பு மிகுதியால்; இணை ஆர மார்பின் அணையா - இணைந்த மாலைகள் பொருந்தி உள்ள மார்பில் இறுகத் தழுவி; விளையாத துன்பம் விளைவித்த தெய்வம் - வரக்கூடாத பெருந் துன்பத்தை உண்டாக்கிய தெய்வம்; வெளி வந்தது என்ன - கருடன் வடிவில் வெளி வந்தது என்று கூறி; வியவா - வியந்து; கிளையார்கள் அன்ன - உறவினர்கள் போன்ற; துணையோரை - துணைவர்களாகிய வானர வீரர்களை; ஆவி கெழுவா எழுந்து தழுவா - உயிர் ஒன்றாகுமாறு நெருக்கமாக எழுந்து தழுவி; முளையாத திங்கள் உகிரான் முன்வந்து - பிறைச் சந்திரன் போன்ற நகங்களை உடைய கருடனுக்கு முன்னால் வந்து; மொழிவான் - (இவற்றைக்) கூறினான்.

வெளி வந்தது - கருட வடிவில் வெளி வந்தது, திங்கள் உகிரான் - சந்திரனைப் போன்ற நகங்களை உடைய கருடன்

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. His younger brother rose and bowed; with love he held him to his chest, where the twin garlands lay,
  2. and marvelled, saying, The god who brought this grief that should never have come has shown himself;
  3. he rose and embraced his companions, who were like his own kin, as if their lives were one;
  4. then the hero who stood by the right came before the one whose claws are like the young moon, and spoke.

What the poem says

The serpent-bonds are gone and Ilakkuvaṉ rises and bows to his brother. Irāmaṉ hugs him close in joy. He marvels that the very deity who brought this undeserved trouble has now appeared in visible form, as Karuṭaṉ.

He embraces his monkey allies, who are as dear to him as kinsmen, and goes to speak to Karuṭaṉ, whose curved claws are compared to the crescent moon.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1iḷaiyāṉ eḻuntu toḻuvāṉai, aṉpiṉ, iṇai āra mārpiṉ aṇaiyā,
‘viḷaiyāta tuṉpam viḷaivitta teyvam veḷi vantatu ‘eṉṉa viyavā,
kiḷaiyārkaḷ aṉṉa tuṇaiyōrai, āvi keḻuvā, eḻuntu taḻuvā
muḷaiyāta tiṅkaḷ ukirāṉ muṉ vantu, muṟai niṉṟa vīraṉ moḻivāṉ.