கம்பராமாயணம் 8314 · யுத்த 18.267
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
தேவர்க்கும் தெரிக்க ஒணாதான் - தேவர்களும் கூட(த் தன் சொரூபத்தை) அறிய முடியாது உள்ளவனாகிய இராமன்; ஐய - (கருடனைப் பார்த்து) ஐயா; நீ யாரே - நீ யார்; எங்கள் அருந்தவப் பயத்தின் - நாங்கள் செய்த மிக்க தவத்தின் பயனால், இங்கு வந்து எய்தினை - இங்கு வந்து அடைந்தாய்; உயிரும் வாழ்வும் ஈந்தனை - (நாகக் கணையால் இறந்தவர்களுக்கு) உயிரையும் வாழ்வையும் தந்தாய்; எம்மனோரால் - எங்களைப் போன்றவர்களால், கையுறை கோடற்கு ஒத்த காட்சியை அல்லை - காணிக்கைப் பொருள் கொள்ளுவதற்கு உரிய தோற்றம் உடையவனாயும் இல்லை; மீட்சி செய்திறம் இலையால் என்றான் - (எனவே நீ செய்த உதவிக்குக் கைம்மாறு செய்ய வழி இல்லை என்றான்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Sir, who are you? By the fruit of our hard penance you have come here
- and arrived; you have given us life and living; you are not one whose form
- is fit to take a gift from people like us; there is no way
- to repay you, said he whom even the gods cannot know.
What the poem says
Irāmaṉ, whose true nature even the gods cannot grasp, does not recognise Karuṭaṉ. He asks him who he is. He feels that this helper has come only as the reward for some great penance of theirs, since he has given life back to those the serpent-arrows had struck down.
He is so glorious that humble people like them could not even offer him a gift, and Irāmaṉ confesses that he has no means of repaying him.