கம்பராமாயணம் 8321 · யுத்த 18.274

Section யுத்த காண்டம் / 18. நாகபாசப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1பழிப்பு அருஞ் சிந்தையாள்பால் சிந்தனை படர, கண்கள்
விழிப்பு இலன், மேனிசால வெதும்பினன், ஈசன் வேலும்
குழிப்பு அரிது ஆய மார்பை மன்மதன் கொற்ற வாளி
கிழிப்புற, உயிர்ப்பு வீங்கிக் கிடந்த வாள் அரக்கன் கேட்டான்

பொருள் · Meaning in Tamil

பழிப்பு அறு மேனியாள் பால் - பழிப்பதற்கு அருமையான திருமேனி அழகுடைய சீதையின் இடத்தில்; சிந்தனை படர - மனம் சென்று பரவியதனால்; கண்கள் விழிப்பு இலன் - கண்களை விழித்துப் பார்த்தலும் இல்லாதவனாய்; மேனி சால வெதும்பினன் - உடம்பு விரகவேதனையால் மிக வெதும்பப்பெற்று; ஈசன் வேலும் - சிவபிரானது சூலவேலும்; குழிப்பு அரிது ஆய மார்பை - துளைப்பதற்கு அருமையான (மிக்க வலிமைஉடையதன் மார்பை; மன்மதன் கொற்ற வாளி கிழிப்புற - மன்மதனது வெற்றி பொருந்திய அம்புகள் ஊடுருவிப் புறம் போக; உயிர்ப்பு வீங்கி - பெருமூச்சு மிகுதியாக; கிடந்த - விட்டுக்கொண்டு கிடந்த; வாள் அரக்கன் - வாள் படையை உடைய அரக்கனாகிய இராவணன்; கேட்டான் - (வானரப் படையினர் எழுப்பிய பேரொலியைக் கேட்டான்.

ஒண்ணுதற்கோ உடைந்ததே ஞாட்பினுள் நண்ணாரும் உட்குமென் பீடு

தகையணங்குறுத்தல் - 8 என்ற குறளை நினைவுபடுத்தலை உணர்க.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. His thoughts spreading toward her whose body is beyond reproach, his eyes
  2. unopened, his body burning hard, the chest that even Īcaṉ's spear
  3. could hardly pierce torn through by Maṉmataṉ's conquering arrows,
  4. the sword-bearing rākṣasa lay heaving long sighs, and he heard it.

What the poem says

The roar reaches Irāvaṇaṉ. He is lying in his palace, sick with longing for Cītai. His eyes are closed, his body burns with desire, and he sighs heavily.

His chest is so hard that even Śiva's trident could hardly pierce it, yet the arrows of Maṉmataṉ, the god of love, have gone right through. The commentary compares a Tirukkuṟaḷ couplet in which the hero, whose strength foes in battle fear, is undone by a woman's bright brow.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1paḻippu aṟu mēṉiyāḷpāl cintaṉai paṭara, kaṇkaḷ
viḻippu ilaṉ, mēṉi cāla vetumpiṉaṉ, īcaṉ vēlum
kuḻippu aritu āya mārpai maṉmataṉ koṟṟa vāḷi
kiḻippuṟa, uyirppu vīṅkik kiṭanta vāḷ arakkaṉ kēṭṭāṉ