கம்பராமாயணம் 8322 · யுத்த 18.275
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
தாதை சொல் தலை மேல் கொண்ட - தந்தையாகிய (தசரதனது) சொல்லைத் தலைமேற்கொண்டு செயல் செய்த; தாபதன் - தவவேடத்தை உடையவனும்; தரும மூர்த்தி - அறந்தலை நிறுத்த வந்தவனும்; ஈதைகள் தீர்க்கும் நாமத்து இராமனை - ஓதியவர்களுடைய துன்பங்களை நீக்கும் திருப்பெயரை உடையவனும் ஆய இராமனை; எண்ணி ஏங்கும் சீதையும் - எண்ணி எண்ணி வருந்துகிற சீதையும்; அவளை உன்னி - அவளை நினைத்து; சிந்தனை தீர்ந்தும் தீராப் பேதையும் - (அவள் தன்னை விரும்பாள் எனத் தெரிந்தும் (அவளிடத்தில் கொண்ட) மோகம் நீங்காத அறிவிலியாகிய இராவணனும்; அன்றி - ஆகிய அவர்களைத் தவிர; அவ் ஊர் - அந்த இலங்கையில், துயில் பெறாதார் யார் உளர் - தூங்காதவர்கள் யார்? ஒருவரும் இல்லை
ஆங்கிலம் · English translationAI
Translation
- Except for Cītai, who pines thinking of Irāmaṉ, the ascetic who took his father's word upon his head,
- the very form of dharma, whose name removes all sorrows,
- and the fool who, thinking of her, though his hopes were ended still could not end them,
- who in that city was there that had not found sleep?
What the poem says
The poet sets the scene in Ilaṅkai at night. Everyone in the city is asleep except two people. One is Cītai, grieving for Irāmaṉ, who took up the life of an ascetic at his father's word and whose name relieves the suffering of those who chant it.
The other is Irāvaṇaṉ. He knows she will never want him, yet he cannot let go of his infatuation.