கம்பராமாயணம் 8325 · யுத்த 18.278

Section யுத்த காண்டம் / 18. நாகபாசப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1‘அங்கதன் அவனும் ஆர்த்தான்; அந்தரம் ஆர்க்கின்றானும்,
வெங்கத நீலன்; மற்றை வீரரும், வேறு வேறு
பொங்கினர் ஆர்த்த ஓசை அண்டத்தின் புறத்தும் போன;
சங்கை ஒன்று இன்றித் தீர்ந்தார் பாசத்தை, தருமம் நல்க!

பொருள் · Meaning in Tamil

அவனும் அங்கதன் ஆர்த்தான் - அந்த அங்கதனும் பேரொலி செய்கின்றான்; வெங்கத நீலன் - கொடும் சினம் உடைய நீலனும்; அந்தரம் ஆர்க்கின்றானும் - விண்ணில் ஓசை எழுமாறு ஒலிக்கின்றான்; மற்றை வீரரும் - பிற வானர வீரர்களும்; வேறு வேறு - தனித்தனியாகப்; பொங்கினர் ஆர்த்த ஓசை - மன மகிழ்ச்சி கொண்டு ஒலித்த பேரொலி; அண்டத்தும் புறத்தும் போன - இந்த அண்டத்திலும் அதற்கு அப்பாலும் பரவின; தருமம் நல்க - அறம் துணை நின்றதனால்; பாசத்தை - நாகக் கணையில் இருந்து; சங்கை ஒன்று இன்றித் தீர்ந்தார் - ஐயம் எதுவும் இல்லாமல் நீங்கினார்கள்; (வானரப் படையினரும் இலக்குவனும் என்க.)

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Aṅkataṉ too is roaring; and the one who makes the sky ring
  2. is fierce, angry Nīlaṉ; and the other heroes, each apart,
  3. swelled with joy, and the noise of their shouting has gone through the universe and beyond;
  4. without a doubt they are freed from the snare, since dharma granted it.

What the poem says

Irāvaṇaṉ goes on. He hears Aṅkataṉ, Vālī's son, and the fiery commander Nīlaṉ, and every other monkey hero shouting for joy, until the sound carries past the bounds of the universe.

He concludes that Ilakkuvaṉ and the army have certainly been freed from the serpent-snare, and admits that dharma itself must have helped them.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1‘aṅkataṉ avaṉum ārttāṉ; antaram ārkkiṉṟāṉum,
veṅkata nīlaṉ; maṟṟai vīrarum, vēṟu vēṟu
poṅkiṉar ārtta ōcai aṇṭattum puṟattum pōṉa;
caṅkai oṉṟu iṉṟit tīrntār pācattai, tarumam nalka!