கம்பராமாயணம் 8327 · யுத்த 18.280

Section யுத்த காண்டம் / 18. நாகபாசப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1தாங்கிய துகிலார், மெள்ளச் சரித்து வீழ் குழலார், தாங்கி
வீங்கிய உயிர்ப்பார் விண்ணை விழுங்கிய முலையார், மெல்லத்
தூங்கிய விழியார், தள்ளித் துளங்கிய நடையார், வல்லி
வாங்கிய மருங்கின் மாதர், அனந்தரால் மயங்கி வந்தார்.

பொருள் · Meaning in Tamil

வல்லி வாங்கிய மருங்குல் மாதர் - பூங்கொடியையும் பின்னிடச் செய்த இடையினை உடைய பெண்கள்; தாங்கிய துகிலார்- (கையில் தூக்கித்) தாங்கிய சேலையை உடையவராயும், மெள்ளச் சரிந்து வீழ் குழலார் - (கூட்டி முடிக்கப் பெறாமையால்) மெல்லச் சோர்ந்து தொங்குகிற கூந்தலை உடையவராயும், தாங்கி வீங்கிய உயிர்ப்பார்- தடைப்பட்டுப் பின்பு மிகுதியாக வெளிப்படுகிற பெருமூச்சினை உடையவராயும், விண்ணை விழுங்கிய முலையார் - ஆகாயத்தை இடமின்றி விழுங்கிய (பருத்த) மார்பகங்களை உடையவராயும்; மெல்லத் தூங்கிய விழியார் - அரை குறையாகத் தூங்கிய கண்களை உடையவராயும்; தள்ளித் துளங்கிய நடையார் - தடுமாறி நடுங்கும் நடையினை உடையவராயும்; அனந்தரால் மயங்கி வந்தார்- தூக்க மயக்கத்தால் மயங்கி (இராவணனோடு) வந்தார்கள்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Holding up their garments, their hair slipping slowly and falling, their breath
  2. held and then swelling out, their breasts that swallowed the sky, their eyes
  3. heavy with sleep, their steps stumbling and unsteady, the women
  4. with waists that put the creeper to shame came, dazed with drowsiness.

What the poem says

The poet describes the palace women woken in the night to attend Irāvaṇaṉ. They clutch their loose garments; their unbound hair slips down; they catch their breath and then sigh deeply.

Their eyes are still half-closed with sleep and their steps falter. Their waists are slenderer than a creeper, and their full breasts seem to fill the sky. They follow the king, stupefied with drowsiness.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1tāṅkiya tukilār, meḷḷac carintu vīḻ kuḻalār, tāṅki
vīṅkiya uyirppār viṇṇai viḻuṅkiya mulaiyār, mellat
tūṅkiya viḻiyār, taḷḷit tuḷaṅkiya naṭaiyār, valli
vāṅkiya maruṅkul mātar, aṉantarāl mayaṅki vantār.