கம்பராமாயணம் 8329 · யுத்த 18.282

Section யுத்த காண்டம் / 18. நாகபாசப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1மழையிழை நீலம் ஊட்டி, வாசமும் புகையும் மாட்டி
உழை உழை சுருட்டி, மென்பூ குவித்து இடைக்கு இடையூறு என்னாப்
பிழையுடை நுதலார் செய்த பெருங் குழல் கருங் கண் செவ்வாய்
இழை அணி மகளிர் சூழ்ந்தார், அனந்தரால் இடங்கள் தோறும்

பொருள் · Meaning in Tamil

மழையினை நீலம் ஊட்டி - மேகத்திற்கு நீல நிறத்தை ஏற்றி; வாசமும் புகையும் ஆட்டி - (அதற்கு) மணத்தையும் (அகில்) புகையையும் ஊட்டி; சுருட்டி - சுருளச் செய்து; உழை உழைமென் பூக்குவித்து - இடை இடையே மென்மையான மலர்களைச் சேர்த்துச் சொருகி; இடைக்கு இடையூறு என்னா - நூலிடைக்குத் துன்பம் உண்டாகும் என்று கருதாமல்; பிழையுடை விதியார் செய்த - பிழையை உடைய விதி உண்டாக்கிய; பெருங்குழல் - நீண்ட கூந்தலையும்; கருங்கண் - கருமையான கண்களையும்; செவ்வாய் - சிவந்த வாயினையும் உடைய; இழை அணி மகளிர் - அணிகலன்களை அணிந்த பெண்கள்; அனந்தரால் - தூக்கக் கலக்கத்தோடு; இடங்கள் தோறும் சூழ்ந்தார் - பக்கங்களில் எல்லாம் (இராவணனைச் சூழ்ந்தார்கள்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Steeping the cloud in blue, imbuing it with fragrance and incense smoke,
  2. curling it here and there, heaping soft flowers in it, not thinking it would trouble the waist,
  3. faulty Fate made their great tresses; with dark eyes and red mouths
  4. the jewelled women thronged round on every side, dazed with sleep.

What the poem says

More women gather round Irāvaṇaṉ, still drowsy. Their hair is like a rain-cloud dyed blue, perfumed with incense smoke, curled and stuck with soft flowers.

The poet calls Fate, which made such long and heavy tresses, 'faulty' for not thinking how they would strain the women's slender waists. They have dark eyes and red lips and wear many jewels.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1maḻaiyiṉai nīlam ūṭṭi, vācamum pukaiyum āṭṭi
uḻai uḻai curuṭṭi, meṉ pūk kuvittu iṭaikku iṭaiyūṟu eṉṉā
piḻaiyuṭai vitiyār ceyta peruṅ kuḻal karuṅ kaṇ cev vāy
iḻai aṇi makaḷir cūḻntār, aṉantarāl iṭaṅkaḷtōṟum