கம்பராமாயணம் 8330 · யுத்த 18.283

Section யுத்த காண்டம் / 18. நாகபாசப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

வானுடை அண்ணல் - சத்தியலோகத்தைத் தனக்கு உரிமையாக உடைய பிரமதேவன்; தேனிடை - தேன் இடத்திலும்; கரும்பில் - கரும்பின் இடத்திலும்; பாலில் - பாலின் இடத்திலும்; அமுதினில் - தேவர்களின் அமுதத்தின் இடத்திலும்; கிளவி தேடி - (உள்ள இனிய பகுதிகளைப்) பேச்சினை (உருவாக்கத்) தேடி அமைத்து; மானிடை - மானின் இடத்திலும்; கயலில் - கயல் மீனிடத்திலும்; வாளில் - வாளின் இடத்திலும்; மலரிடை - மலர்களின் இடத்திலும்; நயனம் வாங்கி - (உள்ள சிறப்புப் பகுதிகளைச் சேர்த்துக்) கண்களாகச் சமைத்து; மற்றும் அனைய மேல் நடை - மற்றும் அவை போன்ற சிறப்புடையவைகளான; நல்வழி நல்கவேண்டி - நல்ல வகைகளைக் கொண்டு படைக்க விரும்பி; செய்த மங்கையர் - படைத்த மகளிர்; மருங்கு சென்றார் - (இராவணன் உடைய) பக்கங்களில் சென்றார்கள்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Seeking speech in honey, in sugarcane, in milk and in nectar,
  2. taking eyes from the deer, the kayal fish, the sword and the flower,
  3. and wishing to grant every other fine grace of the same high kind,
  4. the lord of the heavens made these women, and they went at his side.

What the poem says

Another verse in praise of the women walking beside Irāvaṇaṉ. Brahmā, lord of the highest heaven, is imagined designing them. He took the sweetness of honey, sugarcane, milk and nectar for their speech.

For their eyes he took the qualities of the deer, the kayal fish, the sword and the flower, and he added every other excellence. These are the standard comparisons of Tamil love poetry, piled up for effect.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1tēṉiṭai, karumpil, pālil, amutiṉil kiḷavi tēṭi,
māṉiṭai, kayalil, vāḷil, malariṭai nayaṉam vāṅki,
mēl naṭai aṉaiya maṟṟum nal vaḻi nalka vēṇṭi,
vāṉuṭai aṇṇal ceyta maṅkaiyar maruṅku ceṉṟār.