கம்பராமாயணம் 833 · பால 13.29
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
தானை - அந்தச் சேனையானது; அம்சொல் அமரர் அணங்கு - இனிய மொழி பேசுபவரும், தெய்வப் பெண்ணை; அனையார் - ஒத்தவருமாகிய மகளிர்; உயிர் கவரும் - (தமக்கு இலக்கானவரின்) உயிரைக் கவரவல்ல; கூர் நுதிக்கண் எனும் - கூரிய நுனியோடு கூடிய கண்கள் என்று சொல்லப்படுகின்ற; காலன்வேல் - இயமனுடைய வேற்படையை; குமரர் நெஞ்சு - காளையர் நெஞ்சில்; குளிப்ப வழங்கலால் - தைக்கும்படி செலுத்துவதால்; சமர பூமியும் - போர்க்களத்தையும்; ஒத்தது - ஒத்துள்ளது.
போர்க்களம் வீரர் நெஞ்சு தைக்க வேல் வழங்குவது போலத் திருமணத்திற்காகச் செல்லும் சேனையில் உள்ள பெண்களின் கண் என்று சொல்லக்கூடிய கூற்றுவன் வேல் காளையர் நெஞ்சில் பதியச் செலுத்துவதால் தானை போர்க்களமாயிற்று என்பது - அவநுதியணி.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Because the women, like goddesses, with lovely nectar speech,
- sent the spears of Death that are their sharp-tipped, life-stealing eyes
- plunging into the hearts of the young men,
- the army looked like a battlefield too.
What the poem says
Though the army is marching to a wedding, it also resembles a battlefield, because spears are flying and hearts are being pierced.
The spears are the women's eyes, sharp as Death's own weapons, and the victims are the young men who look at them. Treating the eyes as nothing but spears is a figure of denial, in which the real thing is denied and another put in its place.