கம்பராமாயணம் 8332 · யுத்த 18.285
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
அரக்கனும் - அரக்கனாகிய இராவணனும்; மைந்தன் வைகும் - தன் மகனாகிய (இந்திரசித்தன்) தங்கி உள்ள; ஆடகத்து அமைந்த மாடம் - பொன்னால் செய்யப்பட்ட மாளிகைக்குள்; பொருக்கெனச் சென்று புக்கான் - விரைவாகச் சென்று சேர்ந்தான்; புண்ணினில் குமிழி பொங்கத் - (இலக்குவனது அம்புகள் துளைத்த) புண்களில் (இருந்து) இரத்தக்குமிழி பொங்கி வெளிப்படத்; தரிக்கிலன் - பொறுக்க மாட்டாதவனாகி; மடங்கல் ஏற்றால் - ஆண் சிங்கத்தினால்; தொலைப்புண்டு சாய்ந்து போன - வலிமை கெட்டு ஒழிந்து போன; கருக்கிளர் மேகம் அன்ன - கருமையான நீர் பொருந்திய மேகத்தைப் போன்ற; களிறு அனையானைக் கண்டான் - ஆண் யானையைப் போன்றவனாக உள்ள இந்திர சித்தனைக் கண்டான்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- The rākṣasa went swiftly and entered the golden mansion
- where his son lay; and there, blood bubbling from his wounds,
- unable to bear it, like an elephant felled and laid low by a lion,
- like a dark cloud swelling with rain, he saw him.
What the poem says
Irāvaṇaṉ reaches Intiracittu's golden palace and finds his son lying there badly hurt. Blood still bubbles from the wounds left by Ilakkuvaṉ's arrows, and the pain is too much for him.
The poet compares the dark, mighty prince to a bull elephant brought down by a lion and to a heavy black rain-cloud.