கம்பராமாயணம் 8333 · யுத்த 18.286
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
எழுந்து அடி வணங்கல் ஆற்றான் - எழுந்து (தந்தையின்) அடி வணங்குவதற்குக் கூட முடியாதவனாய்; இருகையும் அரிதின் ஏற்றித் - (தன் இரண்டு) கைகளையும் (பெருமுயற்சி செய்து) அருமைப்பாட்டோடு (தலைக்கு) மேல் தூக்கி; தொழும் தொழிலானை நோக்கித் - தொழுகின்ற தொழிலை உடையவனான இந்திரசித்தன் பார்த்து; துணுக்குற்ற மனத்தன் - நடுக்கம் கொண்ட மனத்தை உடையவனாய்; தோன்றல் - தோன்றலே; அழுங்கினை- (நீ மிக வருத்தம் கொண்டு உள்ளாய், அடுத்தது - அண்மையில்; என்னை வந்தது - உனக்கு என்ன தீங்கு வந்தது; என்று எடுத்துக் கேட்டான் - என்று பல தடவை கேட்டான்; புழுங்கிய புண்ணினானும் - துன்பம் உற்று வருந்துவதற்குக் காரணமாகிய புண்களை உடையனாகிய இந்திரசித்தனும்; இனையன புகலலுற்றான் - இத்தகைய சொற்களைச் சொல்லத் தொடங்கினான்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Unable to rise and bow at his feet, he lifted both hands with difficulty
- in worship; seeing him so, with a startled mind he said, My son,
- you are in pain; what is it that has come upon you?, and he asked it again and again.
- And he, with his burning wounds, began to say these things.
What the poem says
Intiracittu is too weak to get up and bow at his father's feet. With great effort he raises both hands to his head in salute.
Irāvaṇaṉ is shaken to see him like this and asks him again and again what has happened. The wounded prince starts to tell him.