கம்பராமாயணம் 8334 · யுத்த 18.287

Section யுத்த காண்டம் / 18. நாகபாசப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1‘உருவின் உரத்தை முற்றும், உலப்பு இல உதிரம் வற்றப்
பருகின, அளப்பிலாத பகழிகள்; கவசம் பற்று அற்று
அருகின; பின்னை, சால அலசினென்; ஐய! கண்கள்
செருகின அன்றே, யானும் மாயையில் தீர்ந்திலேனேல்?

பொருள் · Meaning in Tamil

ஐய! - ஐயனே; அளப்பில்லாத பகழிகள் - (இலக்குவன் என் மீது தொடுத்த) மிகப்பலவாகிய அம்புகள்; உரத்தை முற்றும் உருவின - என் மார்பு முழுவதும் பாய்ந்து ஊடுருவின; உலப்பு இல உதிரம் வற்றப் பருகின - குறைந்து அழிதல் இல்லாத (என் உடம்பில் உள்ள) குருதியை வற்றிப் போகுமாறு பருகி விட்டன; கவசம் பற்று அற்று அருகின - (என் மார்புக்) கவசங்கள் நெக்கு விட்டுப் பிளந்தன; பின்னை சால அலசினென் - பின்பு மிகவும் தளர்ந்து போனேன்; கண்கள் செருகின அன்றே - (என்) கண்கள் சொருகிவிட்டன அல்லவா? யானும் - நானும்; மாயையின் தீர்ந்திலேனேல் - மாயையினால் மறையாமல் இருந்து இருப்பேன் என்றால்; (இறந்தே போய் இருப்பேன் என்றவாறு)

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. They pierced my breast through and through; they drank my endless blood
  2. until it ran dry, those countless arrows; my armour lost its hold
  3. and fell away; then I grew utterly weak; father, my eyes
  4. would have rolled back, would they not, had I not escaped by magic?

What the poem says

Intiracittu tells his father about his fight with Ilakkuvaṉ. Countless arrows pierced his chest and drank his blood until he was nearly drained. His armour broke apart, and he grew so weak that his eyes began to roll back.

He would have died, he admits, if he had not slipped away by sorcery, making himself vanish.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1‘uruviṉa urattai muṟṟum, ulappu ila utiram vaṟṟap
parukiṉa, aḷappilāta pakaḻikaḷ; kavacam paṟṟu aṟṟu
arukiṉa; piṉṉai, cāla alaciṉeṉ; aiya! kaṇkaḷ
cerukiṉa aṉṟē, yāṉum māyaiyiṉ tīrntilēṉēl?