கம்பராமாயணம் 8335 · யுத்த 18.288

Section யுத்த காண்டம் / 18. நாகபாசப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1இந்திரன், விடையின் பாகன், எறுழ்வலிக் கலுழன் ஏறும்
சுந்தரன், அருக்கன், என்று இத் தொடக்கத்தார் தொடர்ந்த போரில்
நொந்திலன்; இனையது ஒன்றும் நுவன்றிலன்; மனிதன் நோன்மை,
மந்தரம் அனைய தோளாய்! வரம்பு உடைத்து அன்று மன்னோ.

பொருள் · Meaning in Tamil

மந்தரம் அனைய தோளாய் - மந்தரப் பெருங்கிரியை ஒத்த தோள்களை உடையவனே; இந்திரன் - தேவர் தலைவன் ஆகிய இந்திரனும்; விடையின் பாகன் - வெள்ளேற்றை வாகனமாகக் கொண்ட சிவபிரானும்; எறுழ் வலிக்கருடன் ஏறும் சுந்தரன் - மிக்க வலிமை உடைய கருடனை ஊர்தியாகக் கொண்ட அழகிய திருமாலும்; அருக்கன் - கதிரவனும், என்று - என்று கூறும்; இத்தொடக்கத்தார் - இத்தன்மை உடையவர்கள்; தொடர்ந்த போரில் - (என்மீது) தொடங்கிய போரினால்; நொந்திலென் - (நான் சிறிது கூட) வருத்தம் அடையவில்லை; இனையது ஒன்று நுவன்றிலேன் - இத்தகைய சொற்கள் ஒன்றையும் (நான்) சொல்லியதும் இல்லை; மனிதன் நோன்மை - மனிதனாகிய இலக்குவனுடைய வலிமை; வரம்பு உடைத்து அன்று - ஓர் எல்லைக்கு உட்பட்டது அன்று.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Intiraṉ, the rider of the bull, the handsome one who rides Garuḍa of mighty strength,
  2. the Sun, and others of their kind — in the wars they waged on me
  3. I was never hurt; I never spoke a word like this; but this man's strength,
  4. you whose shoulders are like Mount Mantara, has no bounds.

What the poem says

Intiracittu goes on speaking to his father. He has fought Intiraṉ, king of the gods, Śiva who rides the bull, Tirumāl who rides Karuṭaṉ, and the Sun god, and none of them ever hurt him; never before has he had to talk like this.

But the strength of this man Ilakkuvaṉ, he tells Irāvaṇaṉ, whose shoulders are as massive as Mount Mantara, seems to have no limit.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1intiraṉ, viṭaiyiṉ pākaṉ, eṟuḻ valik kaluḻaṉ ēṟum
cuntaraṉ, arukkaṉ, eṉṟu it toṭakkattār toṭarnta pōril
nontileṉ; iṉaiyatuoṉṟum nuvaṉṟileṉ; maṉitaṉ nōṉmai,
mantaram aṉaiya tōḷāy! varampu uṭaittu aṉṟu maṉṉō.