கம்பராமாயணம் 8336 · யுத்த 18.289

Section யுத்த காண்டம் / 18. நாகபாசப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
“
பாட வேறுபாடு · Project Madurai reads
1“இளையவன் தன்மை ஈதால்; இராமனது ஆற்றல் எண்ணில்,
தளை அவிழ் அலங்கல் மார்ப! நம்வயின் தங்கிற்று அன்றால்,
விளைவு கண்டு உணர்வது அல்லால், வென்றிமேல் விளையும் என்ன
உளை; அது அன்று; “ என்னச் சொன்னான் உற்றுளது உணர்ந்திலாதான்.

பொருள் · Meaning in Tamil

தளை அவிழ் அலங்கல் மார்ப - கட்டு அவிழ்ந்த மலர்களால் ஆகிய மாலை அணிந்த மார்பினை உடையவனே!; இளையவன் தன்மை ஈதால்- இளையவனாகிய இலக்குவன் (வலிமையின்) தன்மை இதுவாகும்; இராமனது ஆற்றல் எண்ணின் - இராமனது வலிமையைப் பற்றி எண்ணிப் பார்த்தால்; நம் வயின் தங்கிற்று அன்றால் - நம் இடத்தில் (எண்ணிப் பார்க்கும்படி) பொருந்தியது ஆகாது; விளைவு கண்டு உணர்தல் அல்லால் - இனிமேல் எங்ஙனம் நடக்குமோ என்பதைப் பார்த்துத் தெரிந்துகொள்ள வேண்டுமே தவிர; வென்றிமேல் விளையும் என்ன உளை - வெற்றி (இனி) மேல் நமக்கு உண்டாகும் என்று எண்ணியுள்ளாய்; அது அன்று - அவ்வாறு எண்ணுவது சரி அன்று; என்ன சொன்னான் - என்று சொன்னான்; உற்றுளது உணர்ந்திலாதான் - (இலக்குவனும் வானரப் படைவீரரும் கருடனால் நாகக்கணை நீங்கி எழுந்ததை) அறிந்திலாதவனாகிய இந்திரசித்தன்.

இலக்குவனை வென்ற வெற்றியை எண்ணுவதை விட இனி இராமனுடன் போரிட்டு வெல்லவேண்டும். அப்போரின் முடிவு தான் நம் வலிமையின் தன்மையை முடிவு செய்யும், அவனுடைய ஆற்றலைப் பற்றி நாம் நினைக்கவும் முடியாது என்று இந்திரசித்தன் இராவணனிடம் கூறினான். பகைவரின் ஆற்றல் உணர்ந்து போரிடும் தன்மை கொண்டவன் இந்திரசித்தன் என்பதை அவனது இக்கூற்று உணர்த்தி நிற்கிறது.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Such is the younger brother's nature; and if we think of Irāmaṉ's might,
  2. you whose chest bears garlands of opening buds, it is beyond our reckoning;
  3. we can only know by seeing what comes; you think that victory will grow for us from here;
  4. it is not so, said he, who did not know what had happened.

What the poem says

Intiracittu warns his father. If Ilakkuvaṉ is this strong, Irāmaṉ's power is past imagining. They should not assume victory is coming; they can only wait and see how the fight with Irāmaṉ turns out.

He says this without knowing that Karuṭaṉ has already freed Ilakkuvaṉ and the army. The commentary notes that the speech shows Intiracittu as a warrior who takes the true measure of his enemy.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1“iḷaiyavaṉ taṉmai ītāl; irāmaṉatu āṟṟal eṇṇiṉ,
taḷai aviḻ alaṅkal mārpa! namvayiṉ taṅkiṟṟu aṉṟāl,
viḷaivu kaṇṭu uṇartal allāl, veṉṟi mēl viḷaiyum eṉṉa
uḷai; atu aṉṟu; “ eṉṉac coṉṉāṉ uṟṟuḷatu uṇarntilātāṉ.