கம்பராமாயணம் 8339 · யுத்த 18.292

Section யுத்த காண்டம் / 18. நாகபாசப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
‘‘

பொருள் · Meaning in Tamil

ஐய! - ஐயனே; வெம்பாசம் தன்னால் ஆர்ப்புண்டார் - (இலக்குவனும் வானரப்படை வீரர்களும்) கொடிய நாகக்கணையினால் கட்டுப்பட்டார்கள்; அசனி என்னப் பெய்யும் வெஞ்சரத்தால் - (அதற்கு மேல்) இடியைப் போல் சொரிந்த (என்னுடைய) கொடிய அம்புகளால்; மேனி பிளப்புண்டார் - உடல்கள் பிளக்கப்பட்டார்கள்; உணர்வு பேர்ந்தார் - உணர்வு கெட்டார்கள்; உய்யுநர் என்று உரைத்தது உண்மையோ? - (அத்தகைய நிலை அடைந்தவர்கள் பிழைத்து உள்ளார்கள் (என்று நீ கூறுவது) உண்மைதானா?; ஒழிக்க ஒன்றோ - (அவர்களை நான் கட்டிய நாகக்கணை) ஒழித்து நீக்குவதற்கு உரிய ஒன்றா?; செய்யும் என்று எண்ண - (வேறு ஒன்று அக்கணையை வலி இழக்கச் செய்யும் என்று; தெரியின் - எண்ணிப் பார்த்தால்; தெய்வம் சிறிது அன்றோ அம்மா - இக்கணையை எனக்குக் கொடுத்த தெய்வம் சிறுமை அடைந்து விடுமல்லவா?

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Father, they were bound by the cruel snare; by fierce arrows
  2. raining like thunderbolts their bodies were split; they lost their senses;
  3. is it true, what you say, that they live? Is it something that can be undone?
  4. If one thinks that something could do that, would not the god be made small, father?

What the poem says

Intiracittu cannot believe it. His enemies were bound by the serpent-weapon, cut open by his arrows and left senseless. How can they have survived?

The weapon came from a god. If anything could undo it, that god's power would be belittled. He asks his father whether the report can really be true.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1‘aiya! vem pācamtaṉṉāl ārppuṇṭār; acaṉi eṉṉap
peyyum veñ carattāl mēṉi piḷappuṇṭār; “uṇarvu pērntār
uyyunar ‘‘ eṉṟu uraittatu uṇmaiyō? oḻikka oṉṟō?
ceyyum eṉṟu eṇṇa, teyvam ciṟitu aṉṟō? teriyiṉ ammā!