கம்பராமாயணம் 8345 · யுத்த 18.298

Section யுத்த காண்டம் / 18. நாகபாசப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1‘கரங்களில் நேமி சங்கம் தாங்கிய கரியோன் காக்கும்
புரங்களும் அழியப் போன பொழுதில், என் சிலையின் பொங்கி,
உரங்களின், முதுகின், தோளின், உழையுறு சிறையின் உற்ற
சரங்களும் நிற்கவே கொல், வந்தது அவ் அருணன் தம்பி?

பொருள் · Meaning in Tamil

கரங்களில் - தன் திருக்கைகளில்; நேமி - (தீயவர்களை அழிக்கும் சுதர்சனம் என்னும்) சக்கரப் படையினையும்; சங்கம் - (பகைவரைத்தன் பேரொலியால் குலையச் செய்யும்; பாஞ்ச சன்னியம் என்ற) சங்கினையும் தாங்கிய கரியோன் - தாங்கிய கருநிறம் உடையவனாகிய திருமால்; காக்கும் புரங்களும் - பாதுகாத்துக் கொண்டிருக்கின்ற (வானுலகில் உள்ள அமராவதி முதலிய) நகரங்களும்; அழியப் போன பொழுதில் - அழிந்து சிந்தும் படியாக (நான் அங்கு போருக்குச்) சென்ற காலத்தில்; என் சிலையின் பொங்கி - எனது வில்லில் இருந்து மிகுதியாக வெளிப்பட்டு (வந்த அம்புகள்); உரங்களில் - (தன்னுடைய) மார்பிலும்; முதுகில் - முதுகிலும்; தோளில் - தோளிலும்; உறை உறுசிறையில் - போர்வையாகப் பொருந்திய இறகுகளிலும்; உற்ற சரங்களும் நிற்கவே கொல் - தைத்த அம்புகளும் இன்னும் நிலைத்துத் தைத்திருக்கும் நிலையில் கூடவா?; அவ் அருணன் தம்பி வந்தது - அந்த அருணனுடைய தம்பியாகிய கருடன் (பகைவருக்கு உதவ) வந்தது.

சிலை - வில், உரம் - மார்பு, உறையுறு சிறை - மேற் போர்வையாக இறகுகளை உடைய சிறகு. அருணன் காசியப முனிவர்க்கு வினதையிடம் பிறந்தவன். அவனுடைய இடுப்புக்குக் கீழ் உடல் உறுப்புகள் இல்லாதவன். சூரியன் சாரதி. இங்குக் கருடனை “அருணன் தம்பி' எனக் குறிப்பிட்டது இகழ்ச்சி பற்றி.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. When I went to destroy the cities guarded by the dark one
  2. who holds the discus and the conch in his hands, did the arrows that sprang from my bow
  3. and pierced his breast, his back, his shoulders and the wings that cover his sides
  4. still stand in him when he came, that younger brother of Aruṇaṉ?

What the poem says

Irāvaṇaṉ boasts that when he attacked the heavenly cities under Tirumāl's protection, his arrows struck Karuṭaṉ in the chest, back, shoulders and wings.

He asks whether those arrows were still sticking in him when he came to help the enemy. The commentary notes that calling Karuṭaṉ 'Aruṇaṉ's younger brother' is a deliberate insult. Aruṇaṉ, son of the sage Kaśyapa and Vinatā and charioteer of the Sun, was born without the lower half of his body.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1‘karaṅkaḷil nēmi caṅkam tāṅkiya kariyōṉ kākkum
puraṅkaḷum aḻiyap pōṉa poḻutil, eṉ cilaiyiṉ poṅki,
uraṅkaḷil, mutukil, tōḷil, uḻaiyuṟu ciṟaiyil, uṟṟa
caraṅkaḷum niṟkavēkol, vantatu av aruṇaṉ tampi?