கம்பராமாயணம் 8346 · யுத்த 18.299

Section யுத்த காண்டம் / 18. நாகபாசப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1‘ஈண்டு அது கிடக்க; மேன்மேல் இயைந்தவாறு இயைக! எஞ்சி
மீண்டவர் தம்மைக் கொல்லும் வேட்கையே வேட்கும் அன்றே;
ஆண்தகை! நீயே இன்னும் ஆற்றுதி, அரும்போர் அன்னோன்
காண்டலும், நாணும் ‘என்றான்; மைந்தனும் கருத்தைச் சொன்னான

பொருள் · Meaning in Tamil

ஈண்டு அது கிடக்க - இப்பொழுது அது கிடக்கட்டும்; மேன் மேல் இயைந்தவாறு இயைக- இனிமேல் நடப்பது நடக்கட்டும்; எஞ்சி மீண்டவர் - (இப்போது) (நாகக் கணைக்குத் தப்பி (உயிர் பிழைத்தவர்கள்; தம்மைக் கொல்லும் - தம்மைக் கொல்லுகிற; வேட்கையே வேட்கும் அன்றே - விருப்பத்தையே விரும்புவோம் அல்லவா? ஆண்தகை - (அதனால்) ஆண்மைப் பண்புகள் நிறைந்தவனே; அருமைப் போர்கள் - அருமையான போர்களை; இன்னும் நீயே ஆற்றுதி - மேலும் நீயே சென்று செய்க; காண்டலும் நாணும் என்றான் - (அவ்வாறு போர் செய்து நீ அவர்களை அழிப்பதைக்) கண்டபொழுது (அவர்கள் தப்பிப் பிழைக்க உதவிய கருடன்) நாணங்கொள்ளுவான் என்று (இராவணன் கூறினான். மைந்தனும் - அதற்கு மகனாகிய (இந்திரசித்தனும்); கருத்தைச் சொன்னான் - (தன்) மனக் கருத்தை (இராவணனிடம்) சொன்னான்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Let that be for now; let what comes come; do we not desire
  2. nothing but the desire to kill those who escaped and came back?
  3. Manly one, you yourself must fight these hard battles again;
  4. seeing it, he will be ashamed, he said; and the son spoke his mind.

What the poem says

Irāvaṇaṉ sets the matter aside. All that matters now is to kill the enemies who have escaped death, and he tells Intiracittu to go back and fight once more.

When Karuṭaṉ sees them destroyed after all, he says, he will be ashamed of having helped them. Intiracittu then gives his own opinion.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1‘īṇṭu atu kiṭakka; mēṉmēl iyaintavāṟu iyaika! eñci
mīṇṭavar tammaik kollum vēṭkaiyē vēṭkum aṉṟē;
āṇtakai! nīyē iṉṉum āṟṟuti, arumaip pōrkaḷ;
kāṇṭalum, nāṇum ‘eṉṟāṉ; maintaṉum karuttaic coṉṉāṉ