கம்பராமாயணம் 8348 · யுத்த 19.1
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
ஆர்த்து எழும் ஓசை கேட்ட அரக்கரும் - (வானரப் படை வீரர்கள்) ஆரவாரத்தோடு எழுப்பிய (பேரொலி) கேட்ட அரக்கப் படை வீரர்கள்; முரசம் ஆர்ப்ப - முரசு ஒலிக்க; போர்த் தொழில் வேட்கை பூண்டு - போர்த் தொழில் செய்தலில் பெரு விருப்பம் கொண்டு; பொங்கினர் புகுந்து மொய்த்தார்- சினம் மிக்கவர்களாய்ப் புகுந்து நெருங்கித்; தார்த்தட மார்பன் தன்னை - மாலை அணிந்த அகன்ற மார்பினை உடைய இராவணன் தன்னைப் பார்த்து; விடைதா என்னச் சார்ந்தார் - விடை தருக என்று (கேட்டு) நெருங்கினர்; மன்னன் - அரசனாகிய இராவணன்; முனிந்து பார்த்தனன் - சினம் கொண்டு பார்த்து; இனையன பகர்வது ஆனான் - இத்தகைய சொற்களைச் சொல்லல் ஆனான்
ஆங்கிலம் · English translationAI
Translation
- The rākṣasas too, hearing the noise that rose with the roaring, as the drums thundered,
- filled with the lust for war, swelled with rage, came in and thronged
- about the one with the broad garlanded chest, and approached him, saying, Give us leave;
- the king looked at them, angry, and began to say these things.
What the poem says
A new canto begins: the slaying of the army commanders. The rākṣasa warriors have heard the shouting of the monkey army and the beating of the war drums, and they are eager to fight.
They crowd round Irāvaṇaṉ and ask permission to go into battle. He looks at them in anger and speaks.