கம்பராமாயணம் 835 · பால 13.31
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
வார்குலாம் முலை - (ஒரு பெண்ணின்) கச்சணிந்த தனங்களில்; வைத்த கண் - பதித்த கண்களை; வாங்கிடப் பேர்கிலாது - (அவற்றை) விட்டு வாங்காமல்; பிறங்கு - விளங்கும், முகத்தினான் - முகத்தையுடைய ஒருவன்; நெறி தேர்கிலான் - (தான் செல்லும்) வழி அறிய முடியாதவனாய், அந்தரில் சென்று - குருடர் போலச் சென்று; ஒரு மூரி மா மதம் - ஒப்பற்ற வலிய பெரிய மதமுள்ள; யானையை - யானையின் மேல்; முட்டினான் - முட்டிக் கொண்டான்.
மகளிர் தனங்களில் அழுந்திய தன் கண்ணை மீட்க முடியாத ஒருவன் போகும்வழியில் ஒரு மத யானைமீது மோதிக் கொண்டான் என்பது. வாங்கிட - செய்து என் எச்சம் 'செய' எனத் திரிந்தது. காமத்தால் கண் கெடுதல் இயல்பாதலின் அந்தரில் சென்று என இருபக்கமும் பொருந்திய உவமையைத் தந்தார்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Unable to pull back the eyes he had fixed on breasts bound in a bodice,
- his face glowing and never turning away,
- a man who could not see his road walked on like the blind,
- and butted straight into a huge elephant in must.
What the poem says
A comic moment. A man stares so hard at a woman's breasts that he cannot tear his eyes away, and, walking blindly on, he collides with a great elephant in rut.
The comparison to a blind man works both ways, since desire is proverbially said to blind a person.