கம்பராமாயணம் 836 · பால 13.32

Section பால காண்டம் / 13. எழுச்சிப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1சுழிகொள் வாம்பரி துள்ள, ஓர் தோகையாள்
வழுவி வீழலுற்றாளை, ஓர் வள்ளல்தான்,
எழுவின் நீள் புயத்தால் எடுத்து ஏந்தினான்,
தழுவி நின்று ஒழியான், தரைதான் வையான்.

பொருள் · Meaning in Tamil

சுழிகொள் - நற்சுழிகளையுடைய; வாம்பரி - தாவும் குதிரையானது; துள்ள - துள்ளிப் பாய; ஓர் தோகையாள் - (அஞ்சிய) மயிலைப் போன்ற சாயலையுடையவளாகி; வழுவி வீழலுற்றாளை - (குதிரையிலிருந்து) நழுவி விழுந்தவளை; ஓர் வள்ளல் தான் - இரக்கப் பண்புள்ள ஒரு வீரன்; எழுவின் - கணைய மரம் போன்ற, நீள் புயத்தால் - நீண்ட கையால்; எடுத்து ஏந்தினான் - வாரி எடுத்துத் தாங்கியவனாக; தரைமேல் வையான் - தரைமேல் வையாதவனாய், தழுவி நின்று ஒழியான் - (அவளை) தழுவியபடியே நின்றுவிட்டான்.

குதிரை துள்ளிப் பாய, அதன்மேல் இருந்த ஒருத்தி தவறிக் கீழே விழ அப்போது பக்கத்திலிருந்த வீரன் அவளைத் தன் கைகளால் தழுவிக் கொண்டு நின்றான். அவளை நிலத்தின்மேல் விடவில்லை என்பது.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. When a leaping horse with lucky whorls bucked, and a peacock-like girl
  2. slipped and began to fall, a generous man
  3. caught her up and held her in arms as long and strong as a door-bar;
  4. he stood holding her and would not stop, nor set her down on the ground.

What the poem says

Another light-hearted scene. A girl riding a spirited horse is thrown when it bucks. A gallant young man catches her in his strong arms before she hits the ground.

But having caught her, he goes on holding her, and somehow never gets round to putting her down.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1cuḻi koḷ vām pari tuḷḷa, ōr tōkaiyāḷ
vaḻuvi vīḻaluṟṟāḷai, ōr vaḷḷaltāṉ,
eḻuviṉ nīḷ puyattāl eṭuttu ēntiṉāṉ,
taḻuvi niṉṟu oḻiyāṉ, taraimēl vaiyāṉ.