கம்பராமாயணம் 8364 · யுத்த 19.17
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
1‘உன்மகன் ஒல்கி ஒதுங்கினன் ஒன்றோ?
மின் நகு வான் இடை ஏக விரைந்தான்
அன்னதின் மாயை இயற்றி அகன்றான்
இந்நகர் எய்தினன் உய்ந்தனன் எந்தாய்!
பொருள் · Meaning in Tamil
எந்தாய் - எங்களுக்குத் தந்தை போன்றவனே!; உன் மகன் - உனக்கு மகனாகிய (இந்திரசித்தன்); ஒல்கி ஒதுங்கினன் - (போரினால்) தளர்ந்து ஒதுங்கினான்; அன்றோ - அது மாத்திரமா? மின்நகு வானிடைஏக விரைந்தான் - மின்னல்கள் விளங்குகின்ற ஆகாயத்தினிடத்தில் விரைந்து சென்று; அன்னதின் மாயை இயற்றி அகன்றான் - அங்கிருந்து மாயைச் செயலைச் செய்து நீங்கி, இந்நகர் எய்தினன் - இந்த (இலங்கை) நகரை வந்தடைந்து; உய்ந்தனன் - உயிர் பிழைத்தான்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Did not your own son grow weak and draw aside?
- He sped into the sky where the lightning gleams,
- worked his magic there and went away,
- reached this city and escaped, father!
What the poem says
The two commanders defend themselves by pointing at Intiracittu. Irāvaṇaṉ's own son grew weak in the fight and pulled back.
He rose into the lightning-lit sky, hid himself by sorcery and escaped to the city to save his life. Why then should they alone be blamed for retreating?
ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1‘uṉ makaṉ olki otuṅkiṉaṉ aṉṟō?
miṉ naku vāṉiṭai ēka viraintāṉ
aṉṉatiṉ māyai iyaṟṟi akaṉṟāṉ
in nakar eytiṉaṉ uyntaṉaṉ entāy!