கம்பராமாயணம் 8371 · யுத்த 19.24
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
1கால்கிளர் தேரொடு கால் வரையோடு
மேல்கிளர் பல்கொடி வெண்திரை வீச
மால்கடல் ஆனது மாமழை வானம்
பால்கிளர் மீனிடை ஆடிய பண்பால்.
பொருள் · Meaning in Tamil
கால்கிளர் தேரொடு - காற்றுப்போல் விரைந்து செல்லுகின்ற தேர்ப்படையிலும்; கால் வரையோடும் - கால் படைத்த மலை போன்ற யானைப் படையிலும்; மேல்கிளர் பல் கொடி - மேலே விளங்குகின்ற பல கொடிகள் ஆகிய; வெண்திரை வீச - வெண்மையான அலைகள் வீச; வாள்கள் - வாள் படைகள்; மாப்படை - பெரிய படையின்; பால் கிளர் மீனிடை - இடத்து விளங்குகின்ற மீன்போல; ஆடிய பண்பால் - அசைந்து ஆடிய தன்மையினால்; மால் கடலானது - பெரிய கடல் போல விளங்கியது.
ஆங்கிலம் · English translationAI
Translation
- With chariots swift as the wind and with mountains that walk on legs,
- with many flags rising above like white waves tossing,
- it became a great sea, as the swords of the mighty army
- played like gleaming fish in the water.
What the poem says
The poet compares the advancing army to a great sea. The wind-swift chariots and the elephants, mountains with legs, are its body.
The flags fluttering above are its white-crested waves, and the flashing swords darting among the ranks are like silver fish playing in the water.
ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1kāl kiḷar tēroṭu kāl varaiyōṭum
mēl kiḷar pal koṭi veṇ tirai vīca
māl kaṭalāṉatu māp paṭai vāḷkaḷ
pāl kiḷar mīṉiṭai āṭiya paṇpāl.