கம்பராமாயணம் 8374 · யுத்த 19.27
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
1மாக நெடுங்கரம் வானின் வழங்கா
மேக நெடும்புனல் வாரின மேன்மேல்
போக விலங்கின உண்டன போலாம்
காக நெடுங்கனி யானை களிப்பால்.
பொருள் · Meaning in Tamil
காக நெடுங்களி யானை - காகங்கள் சூழ்ந்துவரும் பெரிய மதம் கொண்ட யானைகள்; களிப்பால் - மத மயக்கத்தால்; நெடுங்கரம் - (தங்களது) நீண்ட துதிக்கையை; மாகவானின் - உயர்ந்த வானத்தில்; வழங்கா - செலுத்தி; மேக நெடும் புனல் வாரின - மேகங்களில் உள்ள மிகுதியான நீரினை வாரி முகந்து; மேன்மேல் போக விலங்கின - மேன்மேல் போதலைத் தவிர்த்தனவாய்; உண்டன போலாம் (அந்த நீரினை) உண்பனவாயின.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Stretching their long trunks into the high sky,
- they scooped up the deep waters of the clouds, and ceased
- to move on further, and seemed to drink —
- the great elephants in rut, with crows about them, in their frenzy.
What the poem says
The rutting elephants, so tall that they seem to touch the sky, raise their trunks into the clouds as they march. They seem to scoop up the rain-water held there and stop to drink it.
Crows hover round them, drawn by the flowing must. The image exaggerates the elephants' size and wild arrogance.
ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1māka neṭuṅ karam vāṉiṉ vaḻaṅkā
mēka neṭum puṉal vāriṉa mēṉmēl
pōka vilaṅkiṉa uṇṭaṉa pōlām
kāka neṭuṅ kaḷi yāṉai kaḷippāl.