கம்பராமாயணம் 838 · பால 13.34
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
சுழியும் குஞ்சிமிசை - சுருண்டுள்ள (தன்) தலைமயிர் மேல்; சுரும்பு - வண்டுகள்; ஆர்த்திட - ஆரவாரிக்க; மாமதம் பொழியும் - மிக்க மதநீரைப் பொழிகின்ற; யானையின் - யானையைப் போல; போகின்றான் - செல்கின்ற ஒருவன்; ஒரு காரிகை விழியை - ஒரு பெண்ணின் விழிகளை; கழிய கூரிய என்று நோக்கி - மிகக்கூர்மையானவை என்று பார்த்து; தன் வேலையும் - (கண் போல இவ்வேற்படை கூர்மையானதா என்ற) தன் வேற்படையையும்; நோக்கினான் - பார்த்தான்.
வீரன் கையில் பிடிக்கும் வேலைக் காட்டிலும் அந்தப் பெண்ணின் கண்கள் மிகக் கூர்மையானவை என்பது. சுழிதல்: சுழிசுழியாகச் சுருண்டிருத்தல். உயிரின் பாய்ந்து துளைக்கும் இயல்புடைய கண்களைவிட உடலில் மாத்திரம் பாய்ந்து துளைத்துச் செல்லும் வேல் இழிந்தது என்று அவ்வீரன் கருதினான்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- With bees humming over his curling locks,
- striding like a great elephant pouring must, a man
- looked at a woman's eyes, thinking, 'How exceedingly sharp!',
- and then looked at his own spear.
What the poem says
A proud young warrior, swaggering like a rutting elephant, catches a woman's glance and is struck by how sharp her eyes are. He then looks at his own spear, as if to compare them.
The point is that her eyes win: a spear pierces only the body, while her eyes pierce straight to a man's life.