கம்பராமாயணம் 839 · பால 13.35

Section பால காண்டம் / 13. எழுச்சிப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1தரங்க வார் குழல் தாமரைச் சீறடிக்
கருங்கண் வாள் உடையாளை, ஓர் காளைதான்,
'நெருங்கு பூண் முலை நீள் வளை தோளினிர்!
மருங்குல் எங்கு மறந்தது நீர்?' என்றான்.

பொருள் · Meaning in Tamil

தரங்க வார்குழல் - அலைபோன்று நீண்ட கூந்தலையும்; தாமரைச் சீறடி - தாமரை போன்ற சிறிய அடிகளையும்; வாள் கருங்கண் - வாள் போன்ற கரிய கண்களையும்; உடையாளை - உடைய ஒரு பெண்ணை; ஓர் காளை - ஒரு வீரன்; நெருங்கு பூண் முலை - அணிகள் பூண்ட நெருங்கிய முலைகளையும்; நீள்வளைத் தோளினீர் - வளையல்களையணிந்த நீண்ட தோள்களையும் உடையவரே; மருங்குல் - (நீங்கள்) உமது இடையை; எங்கு - எந்த இடத்தில்; மறந்தது - மறந்து வைத்து விட்டீர்கள்; என்றான் - என்று கேட்டான்.

அந்த மங்கையின் இடை கண்ணுக்குப் புலனாகாதவாறு மிக நுண்ணியதாக இருந்தது. அப்பெண்ணோடு உரையாட விரும்பியே அந்த இளைஞன் இவ்வாறு வினாவினான்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. To a woman with long hair rippling like waves, small lotus feet
  2. and dark eyes like swords, a young man
  3. said, 'You with the close-set, jewelled breasts and long, bangled arms,
  4. where did you leave your waist behind?'

What the poem says

Another teasing exchange. A young man, looking for an excuse to talk to a beautiful woman, asks her where she has forgotten her waist.

The joke is a compliment: her waist is so slender that it seems to be missing altogether, a stock ideal of beauty in Tamil poetry.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1taraṅka vārkuḻal tāmaraic cīṟaṭik
karuṅ kaṇ vāḷ uṭaiyāḷai, ōr kāḷaitāṉ,
'neruṅku pūṇ mulai nīḷ vaḷait tōḷiṉīr!
maruṅkul eṅku maṟantatu nīr?' eṉṟāṉ.