கம்பராமாயணம் 840 · பால 13.36
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
கூற்றம் போலும் - இயமனைப் போல; கொலை - கொல்லும் தன்மையுள்ள; கணினால் அன்றி - கண்களால் அல்லாமல், மாற்றம் பேசுகிலாளை - (வாய் திறந்து) மறுமொழி பேசாத ஒரு பெண்ணை (பார்த்து); ஓர் மைந்தன் - ஒரு காளை; ஆற்று நீரிடை - (வழியிலே) ஆற்றின் நீரிலே; உமை - உம்மை; அம் கைகளால் எடுத்து - அழகிய கைகளால் தூக்கி எடுத்து; ஏற்றுவார் - (கரை) ஏற்றவல்லவர்; யாவர் கொல் - யார்தாமோ?; என்றான் - என்று வினவினான்.
ஆற்றைக் கடக்கும்போது உம்மைக் கரை சேர்க்க ஆடவன் வேண்டுமே! அப்போது வாய் திறந்து கூப்பிட்டால் தானே அது முடியும். இந்த மவுன விரதம் அப்போது கலையாதே' என்று வினவுகின்றான். 'கண்ணினால் அன்றி மாற்றம் பேசுகிலாளை' - 'கண்ணொடு கண்ணினை நோக்கொக்கின் வாய்ச்சொற்கள் என்ன பயனும் இல' - குறள் 1100.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Of a girl who answered only with eyes as murderous as Death
- and would not speak a word, a young man asked,
- 'When we come to the waters of a river, who will be the ones
- to lift you in their lovely hands and set you on the bank?'
What the poem says
A girl refuses to say a word to a young man and answers him only with her deadly glances. He teases her: when the procession reaches a river, someone will have to carry her across, and how will she get help if she will not open her mouth to call for it?
Her silent eye-talk recalls a Kuṟaḷ couplet: when eyes meet eyes in agreement, words are of no use.