கம்பராமாயணம் 8380 · யுத்த 19.33
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
1‘காலையும் மனத்தையும் பிறகு காண்பது ஓர்
வால் உளை புரவியன் மடித்த வாயினன்
வேலையின் ஆர்ப்பினன் விண்ணை மீக்கொளும்
சூலம் ஒன்று உடையவன் பிசாசன் தோன்றுவான்.
பொருள் · Meaning in Tamil
காலையும் - காற்றினையும், மனத்தையும் - மனத்தினையும்; பிறகு காண்பது - பின்னிடச் செய்யும் (தன்மை உள்ள); ஓர் வாலை உளைப் புரவியன் - ஒப்பற்ற வெண்மையான பிடரிமயிரை உடைய குதிரையை உடையவனும்; மடித்த வாயினான் - கடித்த உதடுகளை உடையவனும்; வேலையின் ஆர்ப்பினன் - கடல் போல் பேரொலி செய்பவனும்; விண்ணை மீக்கொளும் - விண்ணுலகத்தையும் வெல்லவல்ல; சூலம் ஒன்று உடையவன் - சூலப்படை ஒன்றினை உடையவனும் (ஆகித், தோன்றுவான் - தோன்றுபவன்; பிசாசன் - பிசாசன் (என்பவன்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- He who has a horse with a white mane
- that leaves both wind and mind behind, whose lips are bitten,
- who roars like the sea, who carries a single spear
- that can conquer the heavens — he who appears is Picācaṉ.
What the poem says
Vīṭaṇaṉ points out Picācaṉ. His horse has a white mane and is faster than the wind, faster even than thought. He bites his lips in fury and roars like the sea.
He carries a trident strong enough to conquer heaven itself.
ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1‘kālaiyum maṉattaiyum piṟaku kāṇpatu ōr
vālai uḷaip puraviyaṉ maṭitta vāyiṉāṉ
vēlaiyiṉ ārppiṉaṉ viṇṇai mīkkoḷum
cūlam oṉṟu uṭaiyavaṉ picācaṉ tōṉṟuvāṉ.