கம்பராமாயணம் 8387 · யுத்த 19.40

Section யுத்த காண்டம் / 19. படைத் தலைவர் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1ஆண்தகைக் கவிக்குலத் தலைவர் ஆக்கையைக்
கீண்டன புவியினைக் கிழித்த மாக் கரி
தாண்டுவ குலம் பரி மனத்தின் தாவுவ
தூண்டினர் கைவிசைத்து எறிந்த தோமரம்.

பொருள் · Meaning in Tamil

மாதிரம் தாண்டுவ - திசைகளைத் தாண்டுவனவாயும்; மனத்தின் தாவுவ - மனத்தைப் போலத் தாவிச்செல்வனவாயும்; (உள்ள) பரிகுலம் - குதிரைப்படைக் கூட்டத்தைத்; தூண்டினர் - செலுத்தியவர்களான (வீரர்களின்); கைவிசைத்து - கையில் இருந்து வேகமாக; எறிந்த தோமரம் - எறியப்பட்ட தோமரம் என்னும் படைக்கலம்; ஆண்தகை - ஆண்மைத் தன்மை உள்ள; கவிக்குலத் தலைவர் - குரங்குப் படைத்தலைவர்களின்; ஆக்கையைக் கீண்டன - உடம்புகளைக் கிழித்தனவாய்; புவியினைக் கிழித்த - (பூமியில் பட்டு) பூமியைப் பிளக்கச் செய்தன.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. The lances hurled with force from the hands of those who drove
  2. the noble horses that leap past the directions and bound like thought
  3. tore the bodies of the valiant leaders of the monkey host
  4. and ripped into the earth.

What the poem says

The rākṣasa cavalry charges. The horses are swift enough to cross the bounds of the directions and leap as fast as thought.

Their riders throw tōmaram, a kind of javelin, with such force that the weapons tear through the bodies of the monkey commanders and split the ground beneath them.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1āṇ takaik kavik kulat talaivar ākkaiyaik
kīṇṭaṉa puviyiṉaik kiḻitta mātiram
tāṇṭuva kulap pari maṉattiṉ tāvuva
tūṇṭiṉar kai vicaittu eṟinta tōmaram.