கம்பராமாயணம் 8389 · யுத்த 19.42
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
துரகம் உந்தினர் - குதிரைகளைச் செலுத்தும் (அரக்க வீரர்), எடுத்து எறியும் - (வானரப்படையினர்மீது) எடுத்து வீசிய; ஒள் இலை சூலமே - ஒளி பொருந்திய இலை வடிவமாக உள்ள சூலப் படை; கரகம் உந்திய மலை முழையில் - நீர்க்குடத்தைப் போன்று வெளிப்பட்டுத் தோன்றும் மலைக்குகைகளில்; கட்செவி உரகம் உந்தின என - கண்ணே செவியாக உடைய பாம்புகள் புகுந்தன எனும்படி; அரகம் முந்தின - போர்க்களத்துக்கு முந்திச் சென்ற; நெடுங்கவியின் ஆக்கையில் - நீண்ட குரங்குகளின் உடலங்களில்; ஒளிக்கும் - புகுந்து மறையும்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Like snakes, whose eyes are their ears, rushing into mountain caves
- that bulge out like water-pots, the bright leaf-bladed
- tridents, hurled by the riders who spur their horses, sink and vanish
- into the bodies of the tall monkeys who rushed to the front.
What the poem says
The rākṣasa horsemen hurl their leaf-bladed tridents at the monkeys charging in the front line. The weapons sink right into the monkeys' bodies and disappear.
The poet compares this to snakes slithering into mountain caves. In Tamil lore snakes hear with their eyes, hence the epithet kaṭceviyuragam, 'eye-eared serpent'.