கம்பராமாயணம் 8393 · யுத்த 19.46
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
எச்சு உறு துயரிடை எய்த - இளைத்தலை உண்டாக்கும் வறுமைத்துயர் (தங்களை அடைந்ததனால்); ஈத்து உணா - (பிறருக்குக்) கொடுத்து உண்ணாத, முச்சு இறு வாழ்க்கையின் - மூச்சு அற்றுப்போகும் உலக வாழ்க்கையில்; மூண்டுளோர் என - சிக்கித் தவிப்பவர்கள் போல; கிச்சு உறுகிரிபட - நெருப்பைக் கொண்ட மலைகள் விளங்குவது போல் விளங்குகின்ற, கிளர் பொன் தேர் நிரை - விளங்குகிற பொன்னால் ஆகிய தேர்களின் வரிசை; அச்சு இற - அச்சு இற்றுப்போக; ஆடல்வாம் பரி - வலிமை பொருந்தியதாகவுள்ள குதிரைகள்; செல்கில - (அத்தேர்களை இழுத்துச் செல்லமுடியாதனவாயின.
வறுமை உற்றோருக்கு உலக வாழ்க்கை இனிது நடவாதது போல் குதிரைகட்டு அச்சிற்ற தேரை ஈர்த்துச் செல்லுகை இயலாதாயிற்று.
ஆங்கிலம் · English translationAI
Translation
- As hills of fire fell, the rows of bright golden chariots
- had their axles broken, and the prancing horses could not go on,
- like men caught in the life that chokes the breath,
- who never gave and ate, when wasting poverty befalls them.
What the poem says
The monkeys' rocks, glowing like burning mountains, break the axles of the golden chariots, and the horses can no longer pull them.
The poet compares the stuck chariots to people who never shared their food when they had it. When poverty comes, their lives grind to a halt and they can scarcely breathe. The commentary explains that just as life will not run smoothly for the poor, the horses could not drag the broken chariots.