கம்பராமாயணம் 8394 · யுத்த 19.47
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
1மீயவர் யாவரும் வீய வெம் கரி
சேயிருங் குருதியில் திரிவ சேர்வு இல
நாயகர் ஆளொடும் அவிய நவ்விதம்
பாயொடு வேலையில் திரியும் பண்பின.
பொருள் · Meaning in Tamil
மீயவர்- (தம்) மீது இருப்பவர்கள்; யாவரும் - எல்லோரும்; வீய - (பகைவர்களால்) இறந்து ஒழிய; வெங்கரி - கொடிய யானைகள்; சோர்வு இல - சோர்வு இல்லாமல்; சேயிருங் குருதியில் - சிவந்த மிக்க குருதி வெள்ளத்தில்; திரிவ - திரிவன ஆயின; (இக்காட்சி) நாயகர் - மாலுமிகள் யாவரும்; ஆளொடும் - பணியாளர்களுடன்; அவிய - அழிந்திட; நவ்வி - கப்பல்கள்; வேலையில் - கடலில்; தம் பாயொடும்- தமது பாய் மரத்துடன்; திரியும் பண்பன - சுற்றித்திரியும் தன்மையவாய்த் தோன்றின.
ஆங்கிலம் · English translationAI
Translation
- When all those who rode on them were slain, the fierce elephants
- roamed tirelessly in the deep red blood,
- like ships on the sea that drift about with their sails
- when the captains have perished along with their crews.
What the poem says
With their riders all killed, the war elephants wander aimlessly through the pools of blood on the battlefield.
They look like ships whose captains and crews have died, drifting on the sea with their sails still up.
ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1mīyavar yāvarum vīya veṅ kari
cēyiruṅ kurutiyil tiriva cōrvu ila
nāyakar āḷoṭum aviya navvi tam
pāyoṭum vēlaiyil tiriyum paṇpaṉa.