கம்பராமாயணம் 8399 · யுத்த 19.52

Section யுத்த காண்டம் / 19. படைத் தலைவர் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1இன்ன காலையின், ஈர் ஐந்து வெள்ளம், வந்து ஏற்ற
மின்னும் வெள் எயிற்று அரக்கர்தம் சேனையில், வீரன்
அன்ன வெஞ் சமத்து ஆறு வெள்ளத்தையும் அவித்தான்;
சொன்ன நாலையும் இலக்குவன் பகழியால் தொலைத்தான்.

பொருள் · Meaning in Tamil

இன்ன காலையில் - இவ்வாறு நிகழும் நேரத்தில்; ஈர் ஐந்து வெள்ளம் வந்து - பத்து வெள்ளமாக வந்து; ஏற்ற - போர் ஏற்ற; மின்னும் வெள் எயிற்று அரக்கர் - ஒளி உடைய வெண்மையான பற்களை உடைய அரக்கர்; தம் சேனையில் - தம் படையில்; அன்ன வெஞ்சமத்து - அத்தகைய கொடிய போர்க்களத்து; வீரர் - வானரப்படை வீரர் ஆறு வெள்ளத்தையும் அவித்தார்- ஆறு வெள்ளத்தை அழித்தார்கள்; சொன்ன நாலையும் - (மீதியாகச் சொல்லப்படுகிற நான்கு வெள்ளத்தையும்; பகழியால் - அம்புகளால்; இலக்குவன் அழித்தான் - இலக்குவன் அழித்து விட்டான்;

“அன்னவர் தம்மொடும் ஐ - இரு வெள்ளம், மின்னு படைக்கை அரக்கரை விட்டான் (கம்ப 8321) என்று கூறிய கவிஞர் அவ்வாறு வந்த அரக்கர் படையில் ஆறு வெள்ளத்தை வானரப் படைத்தலைவர்களும் நான்கு வெள்ளத்தை இலக்குவனும் அழித்தனர் எனக் கூறினார்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. At that time, of the army of rākṣasas with gleaming white fangs
  2. who had come in ten floods and taken up the fight, the heroes
  3. in that fierce battle wiped out six floods;
  4. the four that remained Ilakkuvaṉ destroyed with his arrows.

What the poem says

Of the ten 'floods' of rākṣasa soldiers that Irāvaṇaṉ sent, the monkey warriors destroy six. Ilakkuvaṉ wipes out the remaining four with his arrows.

The commentary points back to the earlier verse in which Irāvaṇaṉ sent ten floods with the two commanders, and notes how the poet accounts for every one of them.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1iṉṉa kālaiyiṉ, īr aintu veḷḷam, vantu ēṟṟa
miṉṉum veḷ eyiṟṟu arakkartam cēṉaiyil, vīrar
aṉṉa veñ camattu āṟu veḷḷattaiyum avittār;
coṉṉa nālaiyum ilakkuvaṉ pakaḻiyāl tolaittāṉ.