கம்பராமாயணம் 8401 · யுத்த 19.54
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
தத்து நீர்க் கடல் முழுவதும் - ஒலிக்கின்ற நீரை உடைய கடல் முழுவதும்; குருதியாய்த் தயங்க - குருதியாக விளங்க; சித்திரக் குலப் பல்நிற மணிகளும் - (அக்கடலில் உள்ள) விசித்திரமான (வெவ்வேறு) தொகுதிகளாக உள்ள பல்வகை நிறங்களைக் கொண்ட இரத்தினங்களும்; சேந்த - சிவந்த நிறம்பெற்றன; உயர்ந்த ஓங்கல் - உயர்ந்த மதம் மிக்க மலை போன்ற யானைகளின்; மத்தகத்து உகுதரளமும் - கொம்புகளில் இருந்து வெளிப்படுகிற முத்துக்களும்; வளைசொரி முத்தும் - சங்குகள் ஈன்ற முத்துக்களும்; ஒத்து - (ஒரே மாதிரியாகச் சிவந்த நிறம் அடைந்து) ஒத்து; வேறு உருத்தெரியல - வேறு நிறம் தெரியாதவை ஆயின.
ஆங்கிலம் · English translationAI
Translation
- As the whole sea with its leaping waters shone with blood,
- the gems of many colours and wondrous kinds turned red;
- the pearls that fall from the high temples of the rutting elephants
- and the pearls the conches shed became alike, and no other colour could be seen.
What the poem says
The sea has turned completely to blood. The gems of many colours lying in it turn red.
Even the pearls take on the same red colour, both those said to fall from the foreheads of great elephants and those born from conch shells, until nothing of another hue can be seen. Pearls from elephants' heads are a familiar poetic conceit.