கம்பராமாயணம் 8402 · யுத்த 19.55

Section யுத்த காண்டம் / 19. படைத் தலைவர் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1அதிரும் வெஞ்செரு அன்னது ஒன்று அமைகின்ற அளவில்,
கதிரவன், கொழுஞ் சேயொளிக் கற்றை அம் கரத்தால்,
எதிரும் வல் இருள் கரி இறுத்து எழுமுறை, முழுகி,
உதிர வெள்ளத்துள் எழுந்தவன் ஆமென உதித்தான்.

பொருள் · Meaning in Tamil

அன்னது - அப்படிப்பட்ட; அதிரும் வெஞ்செரு - அதிர்கின்ற கொடிய போர்; ஒன்று அமைகின்ற அளவில் - ஒன்று நிகழ்கின்ற பொழுது; கதிரவன் - கதிரவன்; செழுஞ் சேயொளிக் கற்றை - செழுமையான சிவந்த ஒளித் தொகுதிகள் ஆகிய; அம் கரத்தால் - அழகிய கைகளால்; எதிரும் - எதிர்ப்பட்ட; வல் இருட்கரி இறுத்து - வலிய இருளாகிய யானையை அழித்து; உதிர வெள்ளத்தின் - குருதி வெள்ளத்தில்; எழுமுறை மூழ்கி - ஏழு முறை முழுகி; எழுந்தவன் ஆம் என - எழுந்தவன் ஆம் எனக் கூறும் படியாக; எழுந்தான் - உதித்தான்

பகைவரை அழித்தபின் நீராடித் தூய்மைப் படல் போலக் கதிரவன் இருட்பகை அழித்து உதிரக் கடலில் மூழ்கி வந்தனன். தற்குறிப்பேற்ற அணி.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. As that thundering, fierce battle went on,
  2. the Sun, with the lovely hands of his rich red beams,
  3. broke the mighty elephant of darkness that faced him, and rose
  4. as if he had plunged seven times in the flood of blood and come up.

What the poem says

Dawn breaks over the battlefield. The poet imagines the Sun as a warrior: with the red rays that are his hands he has killed the great elephant of darkness, and now rises red, as if he had bathed seven times in the sea of blood.

The commentary names the figure as taṟkuṟippēṟṟam, poetic fancy that assigns an imagined cause. Just as a warrior bathes to purify himself after slaying a foe, the Sun bathes in the blood-sea after destroying the darkness.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1atirum veñ ceru aṉṉatu oṉṟu amaikiṉṟa aḷavil,
katiravaṉ, ceḻuñ cēyoḷik kaṟṟai am karattāl,
etirum val iruṭ kari iṟuttu eḻu muṟai, mūḻki,
utira veḷḷattiṉ eḻuntavaṉ ām eṉa utittāṉ.