கம்பராமாயணம் 8406 · யுத்த 19.59
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
தேரும் யானையும் புரவியும் - தேர்களும் யானைகளும், குதிரைகளும்; விரவின - கலந்து பரந்து கிடந்தன (பரவிக் கிடப்பவை); தேவர் ஊரும் - தேவர் உலகமும்; மானமும் மேகமும் உலகமும் மலையும் - விமானங்களும் மேகமும், பிற உலகங்களும், மலைகளும்; பேரும் - நிலை பெயருகின்ற, மான வெங்காலத்துக் - பெருமை மிக்க யுக முடிவுக்காலத்தில்; கால் பொர - மிகுதியான காற்று வீச; பிணங்கி - மாறுபட்டு; பாரின் வீழ்ந்தன போன்றன - நிலத்தில் விழுந்து கிடப்பவற்றை ஒத்துத் தோன்றின.
“தேவர் ஊரும் மானமும்' என்பதை ஒன்றாக்கி தேவர் ஊர்ந்து செல்கிற விமானங்களும் எனப் பொருள் கூறல் நேரிது என்பது மகாவித்துவான் மயிலம் வே. சிவசுப்பிரமணியன் அவர்கள் கருத்து.
ஆங்கிலம் · English translationAI
Translation
- The chariots, elephants and horses lay mingled and spread,
- like the gods' cities, the flying cars, clouds, worlds and mountains
- that, at the dread time when even the great are moved, were struck by the wind,
- thrown into confusion and fell to the earth.
What the poem says
The wreckage of chariots, elephants and horses covers the field. It looks like the debris of the world's end, when the great wind of dissolution tears down the cities of the gods, their aerial chariots, clouds, worlds and mountains, and scatters them on the earth.
The commentary records a scholar's view that the words for 'gods' cities' and 'flying cars' are better read together as 'the flying cars the gods ride'.